scorecardresearch

அவள் உலக அழகியே! ரோஷினி ஹரிபிரியன் கியூட் போட்டோஸ்

ரோஷினி ஹரிப்பிரியன் அடிப்படையில் ஒரு மாடல். அதிலிருந்து தான் அவருக்கு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அவள் உலக அழகியே! ரோஷினி ஹரிபிரியன் கியூட் போட்டோஸ்
Roshini haripriyan

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இல்லத்தரசிகள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரின் விருப்பமான தொடராக உள்ளது. இது ‘கிருஷ்ணகோலி’ என்ற பெங்காலி சீரியலின் தழுவலாகும்.

பாரதி கண்ணம்மா சீரியலில், அருண் பிரசாத், ஃபரினா ஆசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த சீரியலுக்கு பிறகு கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் வரத் தொடங்கினர். அதனாலேயே பாரதி கண்ணம்மா சீரியல், எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருந்தது.

அதில் கண்ணம்மாவாக நடித்து அனைவரின் இதயங்களையும் கட்டிப்போட்ட ரோஷினி ஹரிப்பிரியன் திடீரென சீரியலில் இருந்து விலகினார். ரோஷினிக்கு நிறைய படவாய்ப்புகள் வந்ததால், தொடரிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகின. பிறகு, ரோஷினி குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில், 10 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். ஆனால் அதில் வெற்றி பெறாமல், பாதியிலே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

ரோஷினி ஹரிப்பிரியன் அடிப்படையில் ஒரு மாடல். அதிலிருந்து தான் அவருக்கு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தனது இன்ஸ்டாகிராமில் மாடர்ன் டிரெஸ், புடவை என அடிக்கடி போட்டோஷூட்களை பதிவிடுவார்.

அப்படி சமீபத்தில் ரோஷினி பகிர்ந்த போட்டோஸ் இணையத்தில் பங்கர வைரலாகியுள்ளது. அதில் சந்தன நிற புடவை, அதற்கு மேட்சிங் ஆக சிவப்பு கலர் ஜாக்கெட் உடன் ஹோம்லி லுக்கில் ரோஷினி பார்க்க அம்சமாக இருந்தார்.

முன்னதாக கருப்பு நிற டீஷர்ட், பலாசோ பாட்டம், லைட் மேக்கப் உடன் இருக்கும் கேஷீவல் படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். இதோ அந்த அழகான போட்டோஸ்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Roshini haripriyan instagram vijay tv