தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சீரியல் ‘பாரதி கண்ணம்மா’மூலம் பலருக்கு அறிமுகமானவர் ரோஷினி ஹரிபிரியன். அப்போது டி.ஆர்.பியில் கலக்கிக் கொண்டிருந்தது. இவருக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் இவருக்கு ரசிகர்கள் ஆனார்கள்.

இந்நிலையில் திடீரென சீரியலில் இருந்து விலகினார். பின், அதே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப் படுத்தினார். போட்டியாளராக களம் இறங்கி நடுவர்கள் மற்றும் பலரது பாராட்டுகளைப் பெற்றார். மாடர்ன் டிரஸ், சேலை என விதமான உடைகளில் அழகு பதுமையாக ரோஷினி.


