விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இல்லத்தரசிகள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரின் விருப்பமான தொடராக உள்ளது. இது ‘கிருஷ்ணகோலி’ என்ற பெங்காலி சீரியலின் தழுவலாகும்.
பாரதி கண்ணம்மா சீரியலில், அருண் பிரசாத், ஃபரினா ஆசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த சீரியலுக்கு பிறகு கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் வரத் தொடங்கினர். அதனாலேயே பாரதி கண்ணம்மா சீரியல், எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருந்தது.
அதில் கண்ணம்மாவாக நடித்து அனைவரின் இதயங்களையும் கட்டிப்போட்ட ரோஷினி ஹரிப்பிரியன் திடீரென சீரியலில் இருந்து விலகினார். ரோஷினிக்கு நிறைய படவாய்ப்புகள் வந்ததால், தொடரிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகின. தற்போது, அவருக்கு பதிலாக புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.
இப்போது ரோஷினி குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில், 10 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருக்கிறார்.
ரோஷினி ஹரிப்பிரியன் அடிப்படையில் ஒரு மாடல். அதிலிருந்து தான் அவருக்கு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தனது இன்ஸ்டாகிராமில் மாடர்ன் டிரெஸ், புடவை என அடிக்கடி போட்டோஷூட்களை பதிவிடுவார்.
அப்படி சமீபத்தில் ரோஷினி பகிர்ந்த போட்டோஸ் இணையத்தில் பங்கர வைரலாகியுள்ளது.
அதில், டஸ்டி பிங் நிறத்தில், பிளேன் காட்டன் புடவையில், கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் உடன், பெரிய கம்மல், சின்ன கருப்பு பொட்டு அணிந்து, பார்க்கவே அழகாக இருக்கிறார். அதற்கு பஞ்சு மிட்டாய் சேலைக் கட்டி என கேப்ஷனும் இட்டுள்ளார். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதை லைக் செய்துள்ளனர்.
அதேபோல கருப்பு, சிவப்பு நிற புடவையுடன், அடிக்கும் காற்றில் கூந்தலை பறக்க விட்டு கடல் அலைகளுடன் விளையாடும் மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள், லவ்லி, கியூட், அழகி என கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“