Advertisment

இப்பவும் டெலிவிஷன் பியூட்டி இவங்க தான்... விருது வென்ற மாஜி கண்ணம்மா!

பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிபிரியன் இந்த ஆண்டின் தொலைக்காட்சி அழகி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
Roshini Haripriyan

Roshini Haripriyan won Television beauty of the year award

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இல்லத்தரசிகள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரின் விருப்பமான தொடராக உள்ளது. இது ‘கிருஷ்ணகோலி’ என்ற பெங்காலி சீரியலின் தழுவலாகும்.

Advertisment

பாரதி கண்ணம்மா சீரியலில், அருண் பிரசாத், ஃபரினா ஆசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த சீரியலுக்கு பிறகு கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் வரத் தொடங்கினர். அதனாலேயே பாரதி கண்ணம்மா சீரியல், எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருந்தது.

அதில் கண்ணம்மாவாக நடித்து அனைவரின் இதயங்களையும் கட்டிப்போட்ட ரோஷினி ஹரிப்பிரியன் திடீரென சீரியலில் இருந்து விலகினார். ரோஷினிக்கு நிறைய படவாய்ப்புகள் வந்ததால், தொடரிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகின. தற்போது, அவருக்கு பதிலாக புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.

அதன்பிறகு ரோஷினி குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில், 10 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

ரோஷினி ஹரிப்பிரியன் அடிப்படையில் ஒரு மாடல். அதிலிருந்து தான் அவருக்கு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தனது இன்ஸ்டாகிராமில் மாடர்ன் டிரெஸ், புடவை என அடிக்கடி போட்டோஷூட்களை பதிவிடுவார்.

தற்போது, ரோஷினி தொலைக்காட்சி பிரிவில், ஷீ பியூட்டி விருதுகள் 2022ஐ வென்று, இந்த ஆண்டின் தொலைக்காட்சி அழகி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

ஒரு வெள்ளை சோபாவில், கையில் விருதுடன் சிரித்தபடி அமர்ந்து இருக்கும் போட்டோவை ரோஷினி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அதில், பச்சை-நீல புடவையில் பொருத்தமான நெக்லஸ் மற்றும் கம்மலுடன் ரோஷினி பார்க்க அழகாக இருந்தார்.  

‘என்னை கவுரவித்ததற்காக ஷீ இந்தியாவுக்கு நன்றி, ஆரம்பத்தில் இருந்தே அபரிமிதமான அன்பு மற்றும் ஆதரவிற்காக உங்கள் அனைவருக்கும் நன்றிகள்” என்று ரோஷினி அதில் எழுதினார்.

அதைப்பார்த்த பலரும் இன்ஸ்டாகிராமில் ரோஷினிக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment