உலக அரங்கில் உச்சரிக்கப்பட்ட தென்னிந்திய திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி இயக்குனர் ராஜ மௌலி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் கதாநாயகனாக நடித்திருப்பார்கள்.
இந்தப் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு தற்போது ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. இந்நிலையில், ஜூனியர் என்.டிஆரின் கார் கலெக்ஷன்ஸ் குறித்து பார்க்கலாம்.
லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus)
ஜூனியர் என்டிஆர் ஆகஸ்ட் 2021 இல் லம்போர்கினி உரஸ் கிராஃபைட் சொகுசு காரை வாங்கினார். அப்போது, இது இந்தியாவின் முதல் உரஸ் கிராஃபைட் கேப்சூல் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சொகுசு எஸ்யூவி எக்ஸ்-ஷோரூம் ரூ.3.16 கோடிக்கு வாங்கப்பட்டது.
இந்தக் காரின் நம்பர் பிளேட் ‘9999’ என்று முடிவடையும். இதற்காக ரூ.17 லட்சம் செலவழித்துள்ளார் ஜூனியர் என்.டிஆர்.
பென்ஸ்
அடுத்து, இந்த பட்டியலில் Mercedes-Benz GLS உள்ளது. என்டிஆர் ஒரு GLS 350d ஐ வைத்திருக்கிறார், இது உண்மையில் இந்த ஜெர்மன் சொகுசு கார் ஆகும். ஏழு இருக்கைகள் கொண்ட இந்தக் காரின் அறிமுக விலை ரூ.80.38 லட்சம் ஆகும்.
ரேஞ்ச் ரோவர் வோக்
ரேஞ்ச் ரோவர் வோக் என்பது ஜூனியர் என்டிஆர் கேரேஜில் உள்ள மற்றொரு ஆடம்பரமான சொகுசு கார் ஆகும். இதன் மதிப்பு ரூ. 1.85 கோடி ஆகும்.
தற்போது புதிய தலைமுறை ரேஞ்ச் ரோவர் வோக் காரின் விலை இந்தியாவில் ரூ.2.31 கோடியில் எக்ஸ்ஷோரூம் விலையில் தொடங்குகிறது.
BMW 7-சீரிஸ்
இந்த கருப்பு நிற BMW 7 சீரிஸ் சொகுசு கார் ஜூனியர் என்.டி.ஆரின் விருப்பத்துக்குரிய கார் ஆகும். இதன் புதிய தலைமுறை மாடல் தற்போது ரூ. 1.70 கோடியிலிருந்து கிடைக்கிறது.
போர்ஸ் 718 கேமன்
இறுதியாக, இந்த பட்டியலில் உள்ள கடைசி கார் போர்ஸ் 718 கேமன் ஆகும். இதன் விலை ரூ 2.54 கோடி ஆகும். இது 3.4 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/