கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இது உலகப் புகழ்பெற்ற கோயிலாகும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விஷேச நாட்களில் அதிக மக்கள் வருவர்.
பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்வர். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26-ம் தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ம் தேதியும் நடைபெற உள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையை முன்னிட்டு திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள அரசு தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு என்ற திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது. தரிசனத்துக்காக வந்த இடத்தில் மரணமடையும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு தேவசம்போர்டில் இருந்து ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பின் கேரள முதல்வர் பினராயி விஜயன் இதை அறிவித்தார். தொடர்ந்து வரக் கூடிய விஷேச நாட்களில் பக்தர்களின் பாதுகாப்புக்காக
14,000 போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“