மாரத்தான் ஓட்டத்தின்போது நீர்ச்சத்து குறையாமல் இருக்க டிப்ஸ்

ஒட்ட பயிற்சி மேற்கொள்பவர்கள், மாரத்தான் போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் போதிய அளவு திரவ உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்பது அவசியம்

ஒட்ட பயிற்சி மேற்கொள்பவர்கள், மாரத்தான் போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் போதிய அளவு திரவ உணவுகளை உட்கொள்ளவேண்டும். இல்லையென்றால், நீர்ச்சத்து குறைபாடு, சோர்வு, ஓட்டத்தின்போது இடையூறு ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால், ஓட்டத்திற்கு முன்பும், ஓட்டத்தின்போதும், பின்பும் திரவ உணவுகள உட்கொள்வது அவசியம்.

ஓட்டத்திற்கு முன்பு:

ஓட்டத்திற்கு முன்பு உங்கள் உடல் அதிகளவு நீர்ச்சத்துடனோ, நீர்ச்சத்து குறைபாட்டுடனோ இருக்கக்கூடாது. விளையாட்டி வீரர்கள் ஓட்டத்திற்கு முன்பு அதிகளவில் திரவ உணவை எடுத்துக்கொள்வர். ஆனால், அது தவிர்க்கப்பட வேண்டும். எனெனில், உடல் உப்பலான நிலையை அது உருவாக்கிவிடும். மாரத்தானுக்கு இரண்டரை மணிநேரத்திற்கு முன்பு 500 மி.லி. நீர் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல், 15 நிமிடங்களுக்கு முன்பு 250 மி.லி. நீர் எடுத்துக்கொள்ளலாம்.

ஒட்டத்தின்போது:

ஒட்டத்தின்போது உங்கள் உடலிலிருந்து வெளியேறும் வியர்வையின் அளவுக்கேற்ப நீர் எடுத்துக்கொள்வது அவசியம். வெப்பநிலைக்கு ஏற்ப நம் உடலிலிருந்து வியர்வை வெளியேறும். இம்மாதிரியான சமயத்தில் பயிற்சியின் ஒவ்வொரு ஒருமணிநேர இடைவெளியிலும் 0.5 லி. முதல் 1 லி. வரை தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம்.

ஓட்டத்திற்கு பின்பு:

அதிக நேர உடற்பயிற்சிக்கு பின்பு, உடலில் நீர்ச்சத்து குறைந்ததுபோல் இருக்கும். அதனை 2 மணிநேரத்திற்குள் மீட்டெடுக்க வேண்டும். 1.25 லி. முதல் 1.5 லி. திரவத்தை எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.

எடுத்துக்கொள்ள வேண்டிய திரவ உணவுகள்:

ஒரு மணிநேரத்யிற்கு குறைவான உடற்பயிற்சி என்றால், தண்ணீர் மட்டும் எடுத்துக்கொள்வது போதுமானது. அதற்கு மேல் என்றால், 30-60 கிராம் கார்போஹைட்ரேட் தேவையானது. கார்போஹைட்ரேட்டை திரவ வடிவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

×Close
×Close