ஓட்டப்பயிற்சி வீரரா நீங்கள்? ஜாகர்ஸ் நிப்பிள் வர வாய்ப்பு - எச்சரிக்கும் மருத்துவர்கள்

ஜாகர்ஸ் நிப்பிள் என்பது மாரத்தான் ஓட்டப்பந்தயம், ஜாக்கிங் அல்லது நீண்ட தூரம் ஓடும்போது, ஆடைகள் தொடர்ந்து மார்பகக் காம்புகளின் மீது உரசுவதால் ஏற்படும் எரிச்சல், வலி மற்றும் சிவத்தல் ஆகும்.

ஜாகர்ஸ் நிப்பிள் என்பது மாரத்தான் ஓட்டப்பந்தயம், ஜாக்கிங் அல்லது நீண்ட தூரம் ஓடும்போது, ஆடைகள் தொடர்ந்து மார்பகக் காம்புகளின் மீது உரசுவதால் ஏற்படும் எரிச்சல், வலி மற்றும் சிவத்தல் ஆகும்.

author-image
WebDesk
New Update
joggers-nipple.psd

ஓட்டப்பயிற்சி வீரரா நீங்கள்? ஜாகர்ஸ் நிப்பிள் வர வாய்ப்பு - எச்சரிக்கும் மருத்துவர்கள்

ஜாகர்ஸ் நிப்பிள் என்பது மாரத்தான் ஓட்டப்பந்தயம், ஜாக்கிங் அல்லது நீண்ட தூரம் ஓடும்போது, ஆடைகள் தொடர்ந்து மார்பகக் காம்புகளின் மீது உரசுவதால் ஏற்படும் எரிச்சல், வலி மற்றும் சிவத்தல் ஆகும். ஆரம்பத்தில் லேசான எரிச்சலாகத் தொடங்கி, தொடர்ந்து உரசல் ஏற்படும் போது கடுமையான வலி மற்றும் புண்களை உண்டாக்கும். சில சமயங்களில் ரத்தம் கூட வரலாம்.

Advertisment

தீவிர ஓட்டப்பந்தய வீரராக இருந்தாலும் அல்லது ஜாக்கிங் செய்யத் தொடங்கியிருந்தாலும், நீங்கள் கேள்விப்பட்டிருக்காத வலிமிகுந்த மற்றும் பெரும்பாலும் கவனிக்கப்படாத நிலை உள்ளது. அதுதான் ஜாகர்ஸ் நிப்பிள் (Jogger's Nipple). இது வேடிக்கையாகத் தோன்றலாம், ஆனால் இதை அனுபவித்தவர்களுக்கு, அதனுடன் வரும் எரிச்சல் தரும்.

ஜாகர்ஸ் நிப்பிள் பாலினம் பாராமல் யாரையும் பாதிக்கலாம். மேலும் சில துணிகள், வானிலை அல்லது முறையற்ற உடற்பயிற்சி உடைகள் காரணமாக பெரும்பாலும் மோசமடைகிறது. இது தற்காலிகமானது என்றாலும், ஓட்டத்திற்குப் பிந்தைய எரிச்சல் உணர்வும் புண்ணும் அன்றாட அசைவுகளைக்கூட அசௌகரியமாக்கும்

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment
Advertisements

ஜாகர்ஸ் நிப்பிள் ஏன் ஏற்படுகிறது?

டாக்டர். குணசேகர் வூப்பலபதி, MBBS, MS, FRCSEd, MCh, GVG இன்விவோ மருத்துவமனைகள் மற்றும் அப்போலோ மருத்துவமனைகளின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர், indianexpress.com-யிடம் பேசுகையில், "ஜாகர்ஸ் நிப்பிள் என்பது உடற்பயிற்சியின் போது, குறிப்பாக நீண்ட தூரம் ஓடும்போது, ஆடைகள் மார்பகக் காம்புகளுடன் தொடர்ந்து உரசும் போது ஏற்படும் ஒரு வகையான உராய்வு-தூண்டப்பட்ட எரிச்சல் ஆகும். இந்த தொடர்ச்சியான உராய்வு மார்பகக் காம்பைச் சுற்றியுள்ள தோல் சிவப்பாக மாறவும், புண் ஆகவும், வெடிக்கவும், அல்லது ரத்தம் வரவும் கூட காரணமாகலாம்" என்று கூறுகிறார்.

சில ஓட்டப்பந்தய வீரர்கள் இதற்கு அதிகமாக ஆளாகிறார்கள், காரணம் அவர்களின் உடற்பயிற்சியின் கால அளவு, அவர்கள் அணியும் துணி வகை, வியர்வை அளவு மற்றும் வெளியே நீட்டியிருக்கும் மார்பகக் காம்புகள் போன்ற உடற்கூறியல் வேறுபாடுகள் போன்ற காரணிகள். "குளிர் வானிலை மார்பகக் காம்புகளை கடினமாக்குவதால் உராய்வு அதிகரிக்கலாம். மேலும் வியர்வையில் ஊறிய துணி தோலுடன் ஒட்டிக் கொள்வதும் இதற்கு ஒரு காரணம்" என்றும் அவர் கூறினார்.

ஜாகர்ஸ் நிப்பிளைத் தடுக்க முடியுமா?

ஜாகர்ஸ் நிப்பிளைத் தடுப்பது என்பது உராய்வைக் குறைப்பதையும், சருமத்தைப் பாதுகாப்பதையும் உள்ளடக்கியது. "ஓட்டப் பயிற்சிக்கு முன், மார்பகக் காம்புகளின் மீது ஒரு பாதுகாப்பு அடுக்கைப் பூசுவது எளிமையான வழிகளில் ஒன்றாகும். vaseline, உராய்வு எதிர்ப்பு பாம்ஸ் (anti-chafing balms) அல்லது மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிப்பிள் கார்டுகள் அல்லது பிசின் பேண்டேஜ்களாக (adhesive bandages) இருக்கலாம்" என்று டாக்டர் வூப்பலபதி கூறுகிறார்.

இந்த பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்களுக்கு, சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியம் என்று அவர் மேலும் கூறுகிறார். வியர்வையை வெளியேற்றும் (moisture-wicking) மற்றும் seamless, இறுக்கமாகப் பொருந்தக்கூடிய ஆடைகளை அணிவது அசைவையும் உராய்வை குறைக்கும். சில ஓட்டப்பந்தய வீரர்கள் நீண்ட ஓட்டங்களுக்கு முன் அந்தப் பகுதியை உலர்ந்த நிலையில் வைத்திருக்க டால்கம் பவுடரைப் (talcum powder) பயன்படுத்துவதாலும் பயனடைகிறார்கள்.

ஓட்டப்பந்தய வீரர்கள் பயன்படுத்த வேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய குறிப்பிட்ட துணிகள், ஸ்போர்ட்ஸ் ப்ராக்கள் அல்லது உராய்வு எதிர்ப்புப் பொருட்கள் குறித்து டாக்டர் வூப்பலபதி பரிந்துரைத்துள்ளார். துணி தேர்வு முக்கிய பங்கு வகிக்கிறது. பருத்தி (cotton) துணிகளை பொதுவாகத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது வியர்வையை உறிஞ்சி ஈரப்பதமாகவே இருக்கும், உராய்வு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அதற்குப் பதிலாக, ஓட்டப்பந்தய வீரர்கள் வியர்வையை சருமத்திலிருந்து வெளியேற்றும் பாலியஸ்டர் (polyester) அல்லது நைலான் கலவைகள் (nylon blends) போன்ற செயற்கை, ஈரப்பதம் உறிஞ்சும் பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்."

பெண்களுக்கு, சரியாகப் பொருந்தக்கூடிய, high-impact மற்றும் minimal seams கொண்ட ஸ்போர்ட்ஸ் ப்ரா உதவக்கூடும். அண்டர்வேயர்கள் (underwires) அல்லது கடினமான தையல்கள் கொண்ட ப்ராக்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை அசைவின் போது மார்பகக் காம்புகளில் உரசலாம். ஆண்களுக்கு, கம்ப்ரஷன் டாப்ஸ் (compression tops) ஆதரவை அளித்து, துணிகளின் அசைவைக் குறைக்க உதவும்.

petroleum jelly, lanolin-based balms அல்லது silicone-based lubricants போன்ற உராய்வு எதிர்ப்புப் பொருட்கள் நம்பகமான பாதுகாப்பை அளிக்க முடியும். இந்த நோக்கத்திற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட nipple covers மற்றும் தடகள டேப்கள் (athletic tapes) உள்ளன, இவை குறிப்பாக மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் அல்லது ஈரப்பதமான வானிலை நிலைகளில் பயிற்சி செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் டாக்டர் வூப்பலபதி 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: