சீரியஸாக வெளியான ‘சாமி 2’ டிரெய்லரை காமெடியாக்கிய மீம்ஸ் மன்னர்கள்!

சாமி 2 டிரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. டிரெய்லர் ரிலீசான சில மணி நேரத்திலேயே சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ் போடத் தொடங்கியுள்ளனர்.

saamy 2 memes
saamy 2 memes

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சாமி 2’ படத்தின் டிரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் நீடிக்கும் இந்த டிரெய்லரில் பல ஆக்‌ஷன் சீன்ஸ்கள் உள்ளது. சண்டைக் காட்சிகளை அதிகமாக வைத்து வெளியிடப்பட்ட இந்த டிரெய்லர் ஏமாற்றம் தந்துள்ளதாக விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளது.

குறிப்பாக விக்ரம் மற்றும் பாபி சிம்ஹா பேசும் பன்ச் டையலாக் பலரையும் “ஷொபா முடியல” என்று கூற வைத்துள்ளது. “நான் தாய் வயித்துல பொறக்கல… பேய் வயித்துல பொறந்த” என்று விக்ரம் கூறும் டையலாகும், “உன் சிரசை நர நரனு அறுக்க போறேண்டா” என்று பாபி சிம்ஹா பேசும் வசனங்களும் ரசிகர்களிடையே குபீர் சிரிப்பைக் கிளப்பியுள்ளது.

பொதுவாகப் ஒரு படத்தின் டிரெய்லர் வைத்தே பொதுமக்கள் அந்தப் படத்திற்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் ஒரே டிரெய்லரில் படத்தை பார்க்காமலேயே ரசிகர்களுக்கு சாமி 2 படத்தின் மீது சலிப்பு ஏற்பட்டுள்ளது.

சும்மாவே இன்று என்ன கிடைக்கும் மீம்ஸ் போடலாம் என்று காத்துக்கிடக்கும் நெட்டிசன்களின் கைகளில் டெம்பிளேட்டுகளை அள்ளிக் கொடுத்துள்ளார் இயக்குநர் ஹரி. அந்த மீம்ஸ்களை உங்களுக்கு அள்ளிக் கொடுக்க முடியவில்லை என்றாலும் கொஞ்சம் கிள்ளிக் கொடுக்கிறோம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Saamy 2 trailer mocked by meme creators

Exit mobile version