Advertisment

சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்: ஆன்லைன் புக்கிங் பண்ணலையா? கவலையை விடுங்க!

ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டும் தினசரி 80 ஆயிரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க கடந்த 5 ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sabarimala online booking without darshan Kerala Tamil News

ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்களும் தற்போது சபரிமலையில் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி மண்டல பூஜையும், வருகிற ஜனவரி மாதம் 14 ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற இருக்கிறது. 

Advertisment

இந்த சீசனையொட்டி உடனடி முன்பதிவு வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டும் தினசரி 80 ஆயிரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க கடந்த 5 ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கேரள அரசின் இந்த முடிவுக்கு பந்தளம் அரச கும்பத்தினர், இந்து அமைப்புகள், ஐயப்பா சேவா சங்கங்கள் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், உடனடி தரிசன வசதியை கடந்த ஆண்டைப் போல் நடைமுறைப்படுத்த அரசுக்கு இந்த அமைப்புகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை கேரள சட்டசபையில் நடந்த கேள்வி நேரத்தின்போது பேசிய முதல்வர் பினராயி விஜயன், ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் ஐயப்ப பக்தர்களுக்கும் சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலம் ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்களும் தற்போது சபரிமலையில் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, ஐயப்ப பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்யாமல் இருந்தாலும் தரிசனம் செய்யலாம். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kerala Pinarayi Vijayan Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment