New Update
/indian-express-tamil/media/media_files/G4Fw2iGvSk6lK0SNvcWc.jpg)
Kerala techie-turned-priest goes to Sabarimala after relinquishing Church licence
இந்து மதத்தின் வளமான பாரம்பரியத்தை என்னால் பார்க்க முடிந்தது. நான் உண்மையைக் கண்டுபிடித்தேன்.
Kerala techie-turned-priest goes to Sabarimala after relinquishing Church licence
கேரளாவில் சாப்ட்வேர் தொழிலை கைவிட்டு, கிறிஸ்தவ பாதிரியாராக மாறிய ஃபாதர் கேஜி.மனோஜ் (50), தேவாலயத்தின் உரிமத்தை கைவிட்டு சபரிமலை கோவிலுக்கு புனித யாத்திரை சென்ற சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் மனோஜ், புதன்கிழமை யாத்திரையை முடித்ததில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “இந்து மதத்தின் வளமான பாரம்பரியத்தை என்னால் பார்க்க முடிந்தது. நான் உண்மையைக் கண்டுபிடித்தேன், ”என்று அவர் கூறினார்.
மனோஜ் புனித யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்தபோது, அவர் இணைந்திருந்த தென்னிந்திய ஆங்கிலிகன் தேவாலயம் விளக்கம் கேட்டது. எந்த ஒரு தேவாலயமும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் தங்கள் நெறிமுறைகளைக் கொண்டுள்ளனர்.
’திருமணங்களை நடத்துவது போன்ற ஒரு பாதிரியார் கடமைகளைச் செய்ய சர்ச் எனக்கு வழங்கிய உரிமங்களைத் திரும்பக் கொடுக்க முடிவு செய்தேன், உண்மையில், நான் அத்தகைய கடமைகளை செய்ததில்லை’, என்று அவர் கூறினார்.
பொறியியல் பட்டதாரியான மனோஜ், 2010 இல் ஆன்மீக வாழ்க்கையை ஆராய முடிவு செய்வதற்கு முன்பு ஐடி நிபுணராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார். 2015 ஆம் ஆண்டில், ஆங்கிலிகன் திருச்சபையின் சென்னை மறைமாவட்டத்தின் கீழ் பாதிரியார் ஆனார்.
’நான் பாதிரியாராக இருந்தாலும், நான் ஒருபோதும் ஒரு பாதிரியாராக எனக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளைச் செய்ததில்லை. அந்த மாதிரியான குருத்துவத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இயேசு போதித்ததை நான் பின்பற்றினேன். கடந்த காலங்களில் சபரிமலை கோவிலுக்கு பல்வேறு மதங்களைச் சேர்ந்த பல கிறிஸ்தவ பாதிரியார்கள் வருகை தந்ததை நான் அறிவேன்.
ஆனால் அதை அவர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தவே இல்லை. என்னைப் பொறுத்தவரை, இது நீண்ட நாள் கனவு’, என்று அவர் கூறினார்.
தன்னை ஒரு ஆன்மீக விஞ்ஞானி என்று அழைத்துக்கொள்ளும் மனோஜ் ஆன்லைனில் life rejuvenation programmes நடத்துகிறார். நான் வகுப்புகள் நடத்துவது மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றுவது, என வேலையைத் தொடர்கிறேன். நான் தேவாலயத்திலிருந்து எதையும் எடுக்கவில்லை, அதன் வளாகத்தை வாழ்க்கைக்காக பயன்படுத்தவில்லை, என்று அவர் கூறினார்.
Read in English: Kerala techie-turned-priest goes to Sabarimala after relinquishing Church licence
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.