புகைப்பழக்கத்துக்கு அடிமையாக்கும் புண்பட்ட மனது

chain smoking : நான்கு ஆராய்ச்சிகளின் அடிப்படையில், மனிதர்கள் கவலை கொள்வது ஒரு பழக்கத்துக்கு அடிமையாவதற்கு வலுவான காரணமாக இருப்பதாக ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நான்கு ஆராய்ச்சிகளின் அடிப்படையில், மனிதர்கள் கவலை கொள்வது ஒரு பழக்கத்துக்கு அடிமையாவதற்கு வலுவான காரணமாக இருப்பதாக ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கவலை கொள்வது, புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாவதை நோக்கிச் செல்வதாக அண்மை கால ஆராய்ச்சி முடிவுகள் குறிப்பிடுகின்றன. ஹார்வர்டு பல்கைலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், நமக்கு ஏற்படும் பாதகமான உணர்வுகளுடன் ஒப்பீடு செய்து பார்த்ததில் கவலை கொள்வது, என்பது ஒரு பழக்கத்துக்கு அடிமையாவதற்கு வலுவான காரணமாக இருக்கிறது என்பது தெரியவந்தது.

ஹார்வர்டு கென்னடி ஸ்கூல் முன்னணி ஆராய்ச்சியாளர் சார்லஸ் ஏ டோரிஸன் கொடுத்துள்ள அறிக்கையில், வழக்கமான அறிவு, என்ற இந்த களத்தில், கோபம், மன அழுத்தம், கவலை, வெறுப்பு, அச்சம் அல்லது அவமானம் போன்ற எந்த ஒரு பாதகமான உணர்வுகளின் வகையில் இருக்கும் தனிநபர்கள் ஒரு மருந்தை அடிமையாக உபயோகிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.”
“புன்பட்ட மனதைக் கொண்டிருந்தால், அதிகமாக புகைபுடி என்ற கருத்தைவிடவும், உண்மை என்பது மிகவும் நுணுக்கமானது என்று எங்கள் பணி குறிப்பிடுகிறது. குறிப்பாக, ஒரு பழக்கத்துக்கு அடிமையாவதற்கான பொருளை உபயோகிப்பதற்கான காரணிகளில் கவலை என்பது குறிப்பாக இருக்கிறது என்பது நாங்கள் கண்டுபிடித்தோம், “ என்று ஆராய்ச்சியாளர் மேலும் கூறுகிறார்.
நான்கு ஆய்வுகளின் கீழ் இந்த முடிவுகள் வெளியாகி உள்ளன. முதல் ஆய்வில், 20 ஆண்டுகளாக 10,685 பேரிடம் பெறப்பட்ட தரவுகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் சுய கவலை கொண்டவர்கள், புகைபிடிப்பவர்கள் ஆவதற்கான தொடர்பு உடையவர்களாக இருந்தனர். பத்தாண்டுகள் அல்லது இருபது ஆண்டுகள் கழித்து மீண்டும் புகைப்பழக்கத்துக்கு ஆளாகினர்.

இரண்டாவது ஆய்வில், கவலை என்பது புகைப்பழக்கத்துக்கு ஆளாக்குகிறதா என்று புகைபிடிப்பவர்களில் 425 பேர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. அவர்களில் கவலைகள் கொண்ட வீடியோவை பார்ப்பவர்கள் அல்லது சுய இழப்பு குறித்து எழுதுபவர்கள் புகைபிடிப்பதற்கான அதிக ஆவல் கொண்டவர்களாக இருந்தனர்.

புகைபிடிக்க வேண்டும் என்ற சுயமான ஆவலை விடவும், புகைபிடிப்பதற்கு பொறுமையின்மை உண்மையான காரணமா என்று மூன்றாவது ஆய்வில் அளவிட்டது. உண்மையில் புகைபிடிக்கும் பழக்கத்துக்கு, எப்படி கவலையானது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அறிய புகைபிடிப்பவர்களிடம் நான்காவது ஆய்வு நடத்தப்பட்டது.

“கோட்பாடு சார்ந்த ஒரு ஆராய்ச்சியானது, இந்த தொற்று நோய் போன்ற பழக்கத்தை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பதை வெளிச்சம்போட்டு காட்ட உதவும் என்று நாங்கள் நம்புகின்றோம்,” என்கிறார் டோரிஸன்.

எப்படி புகைபிடிக்கும் பழக்கம் அடிமையாக மாறுகிறது?

புகையிலையில், நிக்கோடின் ஒரு அடிமைப்படுத்தும் உப பொருள் இருக்கிறது என்று அறியப்படுகிறது. தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் அந்த பழக்கத்துக்கு அடிமையாவதற்கு ஒருவரை இட்டுச் செல்கிறது. கடந்த காலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், புகைபிடிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது என்பதால், புகைபிடிப்பதை ஒரு சடங்குபோல அனுபவிப்பதாக புகைபிடிப்பவர்கள் கூறினர்.
அமெரிக்க கேன்சர் சொசைட்டியின் கூற்றுப்படி, டோபமைன் என்ற வேதிப்பொருள் மூளையைச் சுற்றி வெள்ளமெனப் பாய்கிறது. புகையிலை உபயோக்ககும் ஒரு நபரின் துன்ப உணர்வுகள் போய்விடும். இது தொடர்ச்சியாக நிகழும் என்று தெரியவருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close