'சிவப்பு தங்கம்' என்று அழைக்கப்படும் குங்குமப்பூ அதன் துடிப்பான நிறம், தனித்துவமான சுவை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்பட்ட மிகவும் விலைமதிப்பற்ற நறுமணப்பொருள்.
இருப்பினும், அதன் ஹை வேல்யூ மார்கெட் கலப்படத்திற்கான பிரதான இலக்காக அமைகிறது. எனவே உண்மையான குங்குமப்பூவைக் கண்டறிவது, அதன் முழுப் பலனையும் நீங்கள் பெறுவதை உறுதிசெய்வதற்கு முக்கியமானது.
உண்மையான குங்குமப்பூவை எப்படி கண்டறிவது என்பது இங்கே
கலர் டெஸ்ட்
உண்மையான குங்குமப்பூ தண்ணீரில் ஊறும்போது தங்க நிறத்தை வெளியிடுகிறது, அதேசமயம் போலி குங்குமப்பூ உடனடியாக நிறத்தை வெளியிடுகிறது, பெரும்பாலும் தண்ணீரை சிவப்பு நிறமாக மாற்றுகிறது.
உண்மையான குங்குமப்பூ அதன் நிறத்தை உட்செலுத்த சில நிமிடங்கள் ஆகும்.
வாசனை
உண்மையான குங்குமப்பூ ஒரு நுட்பமான தேன் போன்ற வாசனையுடன் சற்று இனிப்பு மற்றும் மண் சுவை கொண்டது. போலி குங்குமப்பூ பெரும்பாலும் கசப்பாக இருக்கும். தனித்துவமான வாசனை இருக்காது.
உண்மையான குங்குமப்பூ இழைகள் அடர் சிவப்பு நிறத்தில் ஊதுகுழல் போன்ற முனையுடன் இருக்கும். அவை சற்று ஈரமான மற்றும் மீள் தன்மை கொண்டவை. போலி குங்குமப்பூ பொதுவாக தட்டையாகவும் உடையக்கூடியதாகவும் இருக்கும்.
சொலுபிலிட்டி டெஸ்ட்
வெதுவெதுப்பான பாலில் சேர்க்கும் போது, உண்மையான குங்குமப்பூ அதன் நிறத்தையும் நறுமணத்தையும் படிப்படியாக 10 முதல் 15 நிமிடங்களுக்குள் முழுமையாகக் கரைக்காமல் வெளியிடும். போலி குங்குமப்பூ விரைவில் கரைந்து அதன் நிறத்தை இழக்கும்
பேப்பர் டெஸ்ட்
ஈரமான பேப்பர் டவல் மீது குங்குமப்பூவின் சில இழைகளை வைக்கவும். உண்மையான குங்குமப்பூ அதன் நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ளும், அதேசமயம் போலி குங்குமப்பூ கசிந்து அதன் நிறத்தை பரப்பும்.
உண்மையான குங்குமப்பூவை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதைப் புரிந்துகொள்வது, நீங்கள் சிறந்த தரத்தைப் பெறுவதையும் அதன் பல நன்மைகளைப் பெறுவதையும் உறுதி செய்கிறது.
எனவே குங்குமப்பூவை வாங்கும் போது எப்போதும் விழிப்புடன் இருக்கவும், அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த மேலே குறிப்பிடப்பட்ட சோதனைகளைப் பயன்படுத்தவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“