Advertisment

குங்குமப்பூ சாப்பிட்டா குழந்தை கலரா பிறக்காது, ஆனாலும் நீங்க ஏன் கர்ப்ப காலத்தில் சாப்பிணும்?

குங்குமப்பூவில் குழந்தையின் தோலின் நிறத்தை மேம்படுத்தும் எந்த மந்திர குணமும் இல்லை, இருப்பினும், இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாக அறியப்படுகிறது

author-image
WebDesk
New Update
skincare

Saffron

கர்ப்பிணிப் பெண்கள் நம்புவது போலல்லாமல், குங்குமப்பூ பால் தொடர்ந்து குடிப்பதால் குழந்தை கலராக பிறக்காது. ஆனால் கர்ப்ப காலத்தில் இது இன்னும் பரிந்துரைக்கப்படுகிறது. 

குங்குமப்பூவில் குழந்தையின் தோலின் நிறத்தை மேம்படுத்தும் எந்த மந்திர குணமும் இல்லை, இருப்பினும், இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாக அறியப்படுகிறது, மேலும் இது வீக்கத்தைக் குறைக்கவும், தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும், இது ஒரு பெண்ணின் உணவில் ஒரு நல்ல கூடுதலாக இருக்கும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் சுரபி சித்தார்த்தா. (consultant obstetrician and gynaecologist, Motherhood Hospital, Kharghar)

தோலின் நிறம் மரபணு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது, கர்ப்ப காலத்தில் குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வதால் அல்ல, என்று டாக்டர் சீமா ஷர்மா கூறினார். (consultant, obstetrics and gyneacology, Apollo Cradle Children’s Hospital, Moti Nagar, New Delhi)

குங்குமப்பூ செரிமானத்தை மேம்படுத்துகிறது, இது கர்ப்ப காலத்தில் பலவீனமடைகிறது. எனவே, குங்குமப்பூவை பாலில் அல்லது கஞ்சியில் உட்கொண்டால், மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும், என்கிறார் ராதிகா கல்பதரு (Childbirth Educator).

குங்குமப்பூவில் ஆன்டி டிபிரெசென்ட் ஏஜென்ட்ஸ் உள்ளன, அவை மனநிலை மாற்றங்கள் மற்றும் பதட்டத்தை கட்டுப்படுத்துகின்றன. அம்மா  மற்றும் குழந்தை மகிழ்ச்சியாக இருப்பதை இது உறுதி செய்கிறது. 

குங்குமப்பூ கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்த பிரச்சினைகளை நிர்வகிக்க முனைகிறது. மார்னிங் சிக்னெஸ் முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும். குங்குமப்பூவை மிதமான அளவில் உட்கொள்வது இந்த உணர்வைத் தணித்து, குமட்டலில் இருந்து நிவாரணம் தரும். 

Advertisment

pregnancy

வயிற்றில் குழந்தை வளரும்போது, தாயின் உடல் தசைகள் ஸ்ட்ரெட்ச் ஆகிறது. அப்போது அம்மாவுக்கு முதுகு, வயிறு மற்றும் கால்களில் கடுமையான பிடிப்புகள் மற்றும் வலி ஏற்படலாம். குங்குமப்பூவை மிதமாக உட்கொள்வது இந்த வேதனையான காலகட்டத்தில் உங்களுக்கு நிவாரணம் அளிக்கும். 

கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் ரத்த சோகையை சந்திக்க நேரிடும். எனவே கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து நிறைந்த உணவு மற்றும் சப்ளிமெண்ட்ஸ் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தினமும் சிறிது குங்குமப்பூவை உட்கொள்வது இரும்பு மற்றும் ஹீமோகுளோபின் அளவை பராமரிப்பதை உறுதிசெய்து, இந்த அழகான பயணத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவும். 

ஹார்மோன் மாற்றங்கள், வளர்ந்து வரும் வயிறு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை காலையில் எழுந்தவுடன் உங்களை சோர்வடையச் செய்யலாம். உறங்கும் முன் குங்குமப்பூ பால் சாப்பிட்டால், நிம்மதியான இரவு தூக்கம் கிடைக்கும், என்கிறார் கல்பதரு.

குங்குமப்பூவின் லேசான மயக்க விளைவுகள் மிகவும் அமைதியான மற்றும் நிலையான தூக்க முறைகளுக்கு பங்களிக்கும் என்று டாக்டர் சர்மா ஒப்புக்கொள்கிறார்.

இந்த காலகட்டத்தில் பருக்கள், பிரேக்அவுட்கள் மற்றும் நிறமிகள் பொதுவான பிரச்சனைகள். குங்குமப்பூவை தொடர்ந்து உட்கொள்வது தோல் பிரச்சனைகளை நீக்குகிறது மற்றும் ஸ்கின் டோனை மேம்படுத்துகிறது (நிறத்தை அல்ல). 

கர்ப்பம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தலாம். குங்குமப்பூவை தொடர்ந்து உட்கொள்வது, வானிலை மாற்றங்கள் மற்றும் பிற பொதுவான நோய்த்தொற்றுகள் காரணமாக ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. நீங்கள் குங்குமப்பூவை மிதமாகவும், உங்கள் மகளிர் மருத்துவ நிபுணரின் ஆலோசனையுடன் உட்கொண்டால், அது தாய்க்கும் குழந்தைக்கும் அளப்பரிய நன்மைகளுடன் கர்ப்ப காலத்தில் சிறந்ததாக மாறும், என்று ராதிகா கூறினார். 

எவ்வளவு சாப்பிடலாம்?

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் எடுக்க வேண்டிய குங்குமப்பூவின் அளவு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று டாக்டர் சுரபி குறிப்பிட்டார். 

தினமும் எவ்வளவு பாதுகாப்பான அளவு சாப்பிட வேண்டும் என்பது குறித்து உங்கள் நிபுணர் வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றவும். 2-3 குங்குமப்பூவை பாலில் சேர்க்கலாம்.

குங்குமப்பூ பால் குடிப்பது தனிப்பட்ட விருப்பமாக இருக்கும். குங்குமப்பூ கர்ப்பிணிப் பெண்களுக்கு குமட்டல், பதட்டம் மற்றும் மூக்கில் இரத்தப்போக்கு போன்ற பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும், எனவே கவனமாக இருங்கள் மற்றும் நிபுணர் உங்களுக்கு பரிந்துரைக்கும் வரை அதை நீங்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம், என்று டாக்டர் சுரபி கூறினார்.

Read in English: Why is saffron advised during pregnancy?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment