தென்னிந்திய நடிகை சாய் பல்லவி செந்தாமரை சமீபத்தில் தனது பெற்றோருடன் புனித அமர்நாத் யாத்திரை சென்று திரும்பினார். இந்த யாத்திரை குறித்தும் அங்கு நடந்த சில முக்கிய தருணங்கள் குறித்தும் அவர் தனது சமூக வலைதளங்களில் உணர்ச்சி பதிவிட்டுள்ளார்.
Advertisment
அமர்நாத் யாத்திரை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சாய் பல்லவி, "நான் மிகவும் தனிப்பட்ட விஷயங்களை பொது வெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர். ஆனால் நீண்ட நாட்களாக நான் செய்ய விரும்பிய யாத்திரையைப் பற்றி இங்கு எழுத விரும்புகிறேன். ஏறக்குறைய 60 வயதான பெற்றோரை அழைத்துச் செல்வது ஒருவரால் விளக்க முடியாத உணர்ச்சிப்பூர்வமான சோதனையாகும். யாத்திரையில் அவர்களுக்கு ஏற்பட்ட மூச்சிரைப்பு, நெஞ்சு வலி, பனிப்பொழிவில் ஏற்பட்ட சறுக்கல்கள் இவற்றையெல்லாம் பார்த்து சர்வவல்லமையுள்ள இறைவனிடம் நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பத் தோன்றியது.
நான் மலையிலிருந்து கீழே நடந்து சென்றபோது, நான் ஒரு பெரிய விஷயத்தைக் கண்டேன். மக்கள் விட்டுக்கொடுக்கும் விளிம்பில் சில யாத்ரிகளைக் கண்டால், அவர்கள் நீண்ட மூச்சு எடுத்து "ஓம் நம சிவாய" என்று கோஷமிடுகிறார்கள், உடனடியாக அதே யாத்திரிகர்கள் யாத்திரை தொடங்குகிறார்கள் என்றார்.
மேலும் கூறிய அவர் அந்த இடத்தின் அழகை விவரித்தார். இது போன்ற தன்னலமற்ற சேவையின் செயல்களுக்கு சாட்சியாக இருப்பதால் அது சக்தி வாய்ந்தது. நம் செல்வம், அழகு மற்றும் அதிகாரம் எதுவாக இருந்தாலும், ஒருவரின் ஆரோக்கியமான உடல், வலிமையான மனம் மற்றும் இதயம் ஆகியவை மற்றவர்களுக்கு உதவுகின்றன, இது பூமியில் நமது பயணத்தை வாழ வைக்கும் என்றார்.
இந்த அமர்நாத் யாத்திரை எனது மன உறுதியை சோதித்தது. என் உடலை சோதித்து, இந்த வாழ்க்கையே ஒரு புனிதப் பயணம் என்பதை எனக்கு நிரூபித்தது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“