இத்தனை முறை செய்ததை விடுங்க.. பொங்கலுக்கு கொஞ்சம் ஸ்பெஷலா செய்யலாமா சர்க்கரை பொங்கல்!

வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை

By: Updated: January 13, 2021, 09:18:33 AM

sakkarai pongal recipe sakkarai pongal in tamil : தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை.

இந்த பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷல் என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை இன்னும் பலருக்கு சுவையாக செய்யத் தெரியாது.சர்க்கரை பொங்கலை எப்படி சுவையாக செய்வதென்று ஈஸியான செய்முறை

செய்முறை:

முதலில் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு சிறு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பின் அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு, குக்கரை மூடி, முதலில் அதிகப்படியான நெருப்பில் வைத்து 1 விசில் விட்டு, பின் தீயை குறைவில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

அதே சமயத்தில், மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டு கரைய வைக்க வேண்டும்.

வெல்லமானது நன்கு கரைந்ததும், அதனை வடித்துக் கொள்ள வேண்டும்.

பின் குக்கரை திறந்து அதில் வெல்லப் பாகுவை ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து, ஏலக்காய், கிராம்பு மற்றும் சூடத்தை சேர்த்து, பொங்கலை 3-4 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு ஒரு சிறு வாணலியில் மீதமுள்ள அனைத்து நெய்யையும் ஊற்றி உருகியதும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் அதனை குக்கரில் உள்ள பொங்கலில் ஊற்றி, நன்கு கிளறி இறக்கினால், சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி!!!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Sakkarai pongal recipe sakkarai pongal in tamil sweet pongal recipe sakkarai pongal video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X