ஒரு நல்ல ஸ்ட்ரெச் உங்களை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்களை இலகுவாக உணர வைக்கிறது. நீங்கள் ஒரு பிஸியான நாளின் நடுவில் இருக்கும்போது கூட, உங்கள் சோர்வுற்ற கை, கால்களுக்கு சிறிது ஓய்வு கிடைக்கும் வகையில், ஒரு நல்ல ஸ்ட்ரெச் செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அப்படி நடிகை சாக்ஷி அகர்வால் ’அனிமல் மூவ் வொர்க் அவுட்’ செய்யும் வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட இதுவும் ஒருவகையான ஸ்ட்ரெச் தான்.
ஸ்ட்ரெட்ச் ஏன் நல்லது?
ஸ்ட்ரெச் பொதுவாக நமக்கு நல்லது, ஏனெனில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, காயம் வராமல் தடுக்கிறது, மேலும் இது செய்ய சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்!
ஸ்ட்ரெச் எண்டோர்பின்களை வெளியிடுகிறது, இது மனநிலையை உயர்த்துகிறது, வலி மற்றும் மனச்சோர்வுக்கு உதவுகிறது. எண்டோர்பின்கள் வலியை ‘மறைத்து’ உங்களை நன்றாக உணர வைக்கும். அவை வலி சிக்னல்கள் (pain signals) பரவுவதைத் தடுக்கின்றன.
வழக்கமான ஸ்ட்ரெச், உங்கள் தசைகள் மற்றும் மூட்டுகளுக்கு நன்மை செய்வதோடு மட்டுமல்லாமல், உங்கள் மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தையும் வளர்க்கிறது.
ஸ்ட்ரெச் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் தசை விறைப்பைக் குறைக்கிறது. இது உடலின் இயற்கையான ‘feel-good’ chemicals, எண்டோர்பின் வெளியீட்டையும் தூண்டுகிறது, இது தளர்வு மற்றும் நல்வாழ்வின் உணர்விற்கு பங்களிக்கிறது.
இந்த ஸ்ட்ரெச்களை மெதுவாகவும் மென்மையாகவும், அதிகப்படியான சக்தி இல்லாமல் செய்வது முக்கியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“