பத்து ரூவாய்க்கு நாலு இட்லி ; சேலத்தில் ஃபேமஸாகும் மோடி இட்லி!

ஆரோக்கியமானது. சுகாதாரமானது, சுவையானது, தரமானது மற்றும் அதிநவீன கருவிகள் கொண்டு உருவாக்கப்படுகிறது

By: Updated: August 31, 2020, 02:36:08 PM

Salem vendor sales Modi Idlies 4 for Rs. 10 : சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோடி இட்லி என்ற பெயரில் விளம்பர அறிவிப்புகள் வெளியாகி வைரலாகி வருகிறது. சேலம் நகர் வீதி, சின்னக்கடை வீதி, பழைய பேருந்து நிலையம், புதுப்பேருந்து நிலையம், அம்மாப்பேட்டை, சூரமங்கலம், மற்றும் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடி பெயரில் இட்லிக்கான விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : அப்போது மயில்…. தற்போது மழை… சில்லென இருக்கும் மோடியின் ட்விட்டர் பக்கம்!

பாஜகவின் பிரச்சார அணி மாநில துணைத்தலைவர் மகேஷ் பெயரை மேலே அச்சிட்டு, ரூ. 10க்கு நான்கு இட்லிகள் அதுவும் சாம்பாருடன் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுகள் முழுமையாக நீக்கப்பட்ட பிறகு சேலம் செல்லும் நபர்களுக்கு எல்லாம் மோடி இட்லி தான் ஃபேவரைட் இடமாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை தான்.

ஆரோக்கியமானது. சுகாதாரமானது, சுவையானது, தரமானது மற்றும் அதிநவீன கருவிகள் கொண்டு உருவாக்கப்படுகிறது என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த கடை திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Salem vendor sales modi idlies 4 for rs 10 posters went viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X