பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். 1998-ம் ஆண்டு, ஜோத்பூரில், அரியவகை மான் ஒன்றை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அவர் இப்போது ஜாமீனில் இருக்கிறார்.
இந்த நிலையில் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக குஜராத்தில் பதுங்கியிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனா்.
இதையடுத்து பந்தராவில் உள்ள சல்மான் கான் வீட்டிற்கு மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே செவ்வாய்க்கிழமை சென்று அவரை சந்தித்தார். அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தியவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சல்மான் கான் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவா் தெரிவித்தார்.
இந்த சம்பவங்களால் இப்போது பலரும் சல்மான் கானை பற்றி இணையத்தில் தேடி வருகின்றனர்.
சல்மான் கானுக்குச் சொந்தமான ஆடம்பரமான விலை உயர்ந்த பொருட்கள் குறித்த விவரங்கள் இங்கே.
பாந்த்ரா அடுக்குமாடி குடியிருப்பு
சல்மான் தனது குடும்பத்துடன் பாந்த்ராவின் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு ஆடம்பரமான சீ- ஃபேஸிங் டிரிப்ளெக்ஸ் குடியிருப்பில் வசிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இங்குதான் துப்பாக்கிச் சூடு நடந்தது.
DNA படி, இதன் சொத்து மதிப்பு சுமார் ரூ 100 கோடி ஆகும்.
பன்வெல்லில் உள்ள பண்ணை வீடு
சல்மானின் கிராமப்புற காதல் பன்வெல்லில் உள்ள அவரது பரந்த பண்ணை வீட்டில் இருந்து தெரிகிறது. இந்த பரந்த 150 ஏக்கர் எஸ்டேட்டில் வீட்டை தாண்டி அதிகம் உள்ளது.
சல்மான் மற்றும் அவரது நெருங்கியவர்களுக்கு மிகவும் பிடித்தமான இந்த பண்ணை வீடு, ரூ.80 கோடி மதிப்புடையது.
பிரைவட் யச்சட்
சல்மான் தனது 50வது பிறந்தநாளில் ஒரு தனி படகு ஒன்றை தனக்கு பரிசாக அளித்தார். சுமார் 3 கோடி ரூபாய் செலவில், இந்த படகு நடிகர் மற்றும் அவரது விருந்தினர்களுக்கு மிகவும் பிடித்த விருந்து இடமாகும்.
கோராய் கடற்கரை வீடு
மகாராஷ்டிர மாநிலம் கோரையில் 5 படுக்கையறைகள் கொண்ட ஆடம்பரமான கடற்கரை வீட்டில், சல்மான் கான் தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார்.
உடற்பயிற்சி கூடம், ஒரு பெரிய நீச்சல் குளம், ஒரு தியேட்டர் மற்றும் பிரத்யேக பைக் அரங்குடன் கூடிய இந்த செழுமையான இல்லத்தின் விலை சுமார் 100 கோடி ரூபாய்.
சொகுசு கார்கள்
சல்மானின் கேரேஜில் உயர்தர கார்களின் கலெக்ஷன் உள்ளது. இதில் ரூ.82 லட்சம் மதிப்புள்ள Mercedes Benz S Class, ரூ.1.13 கோடி விலையுள்ள Audi A8 L, ரூ.1.15 கோடி விலையில் BMW X6, ரூ.1.29 கோடி மதிப்புள்ள Toyota Land Cruiser, ரூ.1.29 கோடி மதிப்புள்ள Toyota Land Cruiser, ரூ.1.4 கோடியில் Audi RS7, ரூ.2.06 கோடியில் ரேஞ்ச் ரோவர், ரூ.2.31 கோடியில் Audi R8, சுமார் ரூ.2.32 கோடி விலையுள்ள Lexus LX470 ஆகியவை அடங்கும்.
பிராண்ட்
சல்மான் தனது திரைப்பட வாழ்க்கையைத் தாண்டி, சல்மான் கான் அறக்கட்டளையின் கீழ் 2012 இல் பீயிங் ஹ்யூமன் நிறுவனத்தை நிறுவினார். ஆடைகள், நகைகள் மற்றும் கடிகாரங்களை விற்கும் பிராண்டின் மதிப்பு ரூ. 235 கோடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“