பல மாத உப்பு கறை; பாத்ரூம் பக்கெட் மீது இந்த 2 பொருள் தூவுங்க… புதுசு போல் மாறும்!
இது பக்கெட்டுகளுக்கு மட்டுமன்றி, குளியலறையில் உள்ள டைல்ஸ்கள், சிங்க், மற்றும் சமையலறையில் உள்ள டைல்ஸ்கள் ஆகியவற்றில் படிந்திருக்கும் கறைகளையும் நீக்கப் பயன்படுத்தலாம்.
இது பக்கெட்டுகளுக்கு மட்டுமன்றி, குளியலறையில் உள்ள டைல்ஸ்கள், சிங்க், மற்றும் சமையலறையில் உள்ள டைல்ஸ்கள் ஆகியவற்றில் படிந்திருக்கும் கறைகளையும் நீக்கப் பயன்படுத்தலாம்.
உங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் உப்புத் தண்ணீராக இருந்தால், அது வாளியில் உப்பு படிந்து பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். கறைகளை நீக்க எவ்வளவு முயற்சி செய்தாலும், அது நீங்காமல் பிடிவாதமாக இருக்கும். இந்தக் கறைகளைப் போக்க நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டாம்.
Advertisment
உப்பு மற்றும் கடினமான தண்ணீரின் கறைகளைப் போக்க, பிதாம்பரி பவுடர் மற்றும் டிடர்ஜென்ட் பவுடர் கலவையைப் பயன்படுத்தலாம்.
ஒரு சிறிய கிண்ணத்தில் தேவையான அளவு பிதாம்பரி பவுடரையும், அதனுடன் சம அளவு டிடர்ஜென்ட் பவுடரையும் எடுத்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த பவுடரை வாளியின் உப்புக் கறைகள் படிந்திருக்கும் இடத்தில் தூவி விடவும். பின், ஸ்டீல் ஸ்க்ரப்பரைக் கொண்டு நன்கு தேய்க்கவும். அழுத்தித் தேய்த்தால், கறைகள் எளிதில் நீங்கும்.
Advertisment
Advertisements
கறைகள் நீங்கிய பின், வாளியை சுத்தமான தண்ணீரில் கழுவினால், அது புதிது போல் பளபளப்பாக மாறும்.
புளித்த இட்லி மாவு
உங்களிடம் ஏற்கனவே புளித்த இட்லி அல்லது தோசை மாவு இருந்தால் அதை பயன்படுத்தலாம். உப்புக்கறை படிந்திருக்கும் பக்கெட், பிளாஸ்டிக் கப் உட்புறம், வெளிப்புறம் புளித்த மாவை நன்கு தடவவும். கறைகள் அதிகமாக இருக்கும் இடங்களில் சற்று தடிமனாகப் பூசலாம்.
பூசிய மாவை குறைந்தது 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.
ஸ்டீல் ஸ்க்ரப்பர் பயன்படுத்தி பக்கெட்டை நன்றாகத் தேய்க்கவும். புளித்த மாவில் உள்ள அமிலம் உப்புக்கறைகளை இளகச் செய்து எளிதாக நீக்க உதவும். தேய்த்த பிறகு பக்கெட்டை சுத்தமான நீரில் நன்கு கழுவவும். கறைகள் முழுமையாக நீங்கி பக்கெட் பளிச்சென்று இருக்கும்.