சூடான நீரில் உப்பு கலந்து குடிப்பதால் பல்வேறு நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது உடலில் உள்ள எலக்ட்ரோலைட் அளவை சீராக்க உதவுகிறது. மனித உடலுக்கு சோடியம், பொட்டாஷியம், கால்சியம், மெக்னீஷியம் கொண்ட எலக்ட்ரோலைட் அளவு மிகவும் முக்கியம். உடல் பயிற்சி, உடல் சரியில்லாதபோது, அதிக வெப்ப நிலை நிலவும்போது எலக்ட்ரோலைட் இழப்பு ஏற்படும். இந்நிலையில் சூட நீரில் உப்பு கலந்து குடித்தால், இழந்த எலக்ட்ரோலைட் அளவு மீண்டும் உடலுக்கு கிடைக்கும்.
ஜீரணத்திற்கு பயன்படும் திரவத்தை சுரக்க உதவும். இது உணவை உடைக்க உதவி செய்வதால், சீக்கிரமாக ஜீரணமாகும். வயிற்றில் உள்ள பி.எச் அளவை சீராக்க உதவுகிறது.
உப்பு கலந்த சூடான நீர் குடித்தால், உடலில் உள்ள நஞ்சுக்களை வெளியேற்றும். இந்த தண்ணீர் சிறுநீரகத்தை, கல்லீரலை உத்வேகப்படுத்தும். இதனால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.
சுவாசஸ் கோளாறு குறிப்பாக சளி, இருமல், தொண்டை வலி இருந்தால், நாம் சூடனா தண்ணீரில் உப்பு சேர்த்து கார்கிள் செய்வோம். உப்பு தண்ணீர் சளியை உடைத்து அதை குறைக்க முயலும். மேலும் வீக்கம், மற்றும் இதனால் ஏற்படும் உடல் நலமின்மையை குறைக்கும்.
இது உடல் எடை குறைய மறைமுகமாக உதவும். இது ஜீரண மண்டலத்தை சுத்தம் செய்யும். அதில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது மூலமாக உடல் எடை குறையும்.
மேலும் இதனால் மன அழுத்தம் குறையும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள மெக்னீஷியம் நமது நரம்பு மண்டலத்தில் ஓய்வாக உணரச் செய்கிறது. இதனால் மன அழுத்தம் குறையும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“