இப்போ டீக்கடைக்கும் போக முடியல! சாம் சி.எஸ். மனம் திறந்த பேட்டி

நான் இப்போ என்னோட ஃபேவரிட் டீக்கடையில் போய் டீ குடிக்க முடியல. ஒரு காலத்தில், என் பாடல்கள் எல்லாருக்கும் தெரியும். ஆனா, என் முகம் யாருக்கும் தெரியாது. அது ஒருவிதமான சந்தோஷமா இருந்துச்சு. இப்ப நிறைய பேருக்கு என் முகம் தெரிய ஆரம்பிச்சிடுச்சு.

நான் இப்போ என்னோட ஃபேவரிட் டீக்கடையில் போய் டீ குடிக்க முடியல. ஒரு காலத்தில், என் பாடல்கள் எல்லாருக்கும் தெரியும். ஆனா, என் முகம் யாருக்கும் தெரியாது. அது ஒருவிதமான சந்தோஷமா இருந்துச்சு. இப்ப நிறைய பேருக்கு என் முகம் தெரிய ஆரம்பிச்சிடுச்சு.

author-image
WebDesk
New Update
Sam CS Music

Sam CS

திரைப்பட ரசிகர்களுக்கு சாம் சி.எஸ். என்றால், மனதை உருக்கும் பின்னணி இசை, துள்ளல் மிகுந்த பாடல்கள், மற்றும் கதைக்கு உயிர் கொடுக்கும் இசைக்கோர்வைகள் நினைவுக்கு வரும். ஒரு காலத்தில், சாம் சி.எஸ்.ஸின் பாடல்கள் மிகப் பிரபலம். ஆனால், அவரது முகம் அவ்வளவு பரிச்சயம் இல்லை. அந்த நிலைமை இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது. இப்போது எல்லோருக்கும் சாம் சி.எஸ். யார் என்று தெரியும். ஆனால், அது அவருக்கு ஒருவித வருத்தத்தைத்தான் அவருக்கு தருகிறது. 

சினிமா எக்ஸ்பிரஸ் யூடியூப் சேனலுக்கு சாம் சி.எஸ். அளித்த பேட்டி 

Advertisment

"நான் இப்போ என்னோட ஃபேவரிட் டீக்கடையில் போய் டீ குடிக்க முடியல. ஒரு காலத்தில், என் பாடல்கள் எல்லாருக்கும் தெரியும். ஆனா, என் முகம் யாருக்கும் தெரியாது. அது ஒருவிதமான சந்தோஷமா இருந்துச்சு. இப்ப நிறைய பேருக்கு என் முகம் தெரிய ஆரம்பிச்சிடுச்சு. அதுதான் எனக்கு கொஞ்சம் கவலையா இருக்கு. அது ஒருவிதமான நல்ல உணர்வை தந்தாலும், அந்த பழைய வாழ்க்கையை கொஞ்சம் மிஸ் பண்றேன். எனக்கு ஒரு நார்மல் டீக்கடையில் போய் டீ குடிக்கிறது ரொம்ப பிடிக்கும். வடை சாப்பிடுறது பிடிக்கும். சின்ன வயசுல இருந்து வளர்ந்ததால, அந்த உணர்வு எனக்கு ரொம்ப நெருக்கமானது. ஆனால் இப்போ அதெல்லாம் செய்ய முடியல.

'யாரு இவன்? சாம் சி.எஸ் தானா?'

"ஒரு இடத்துல போய் கார் நிப்பாட்டினாலே, 'சாம் சி.எஸ்' என்று சொல்லி கூட்டம் சேரும். உடனே வண்டிய எடுத்துட்டு கிளம்பிடுவேன். ஒருவிதமான கூச்சம். நாம் ஒரு வடை எடுத்து சாப்பிடும்போது, ஐந்து பேர் நம்மைப் பார்த்துக்கொண்டிருந்தால், அது ஒருவிதமான கூச்சத்தை உண்டாக்கும். அது ஒரு கான்ஷியஸை உருவாக்குது. ஆனால் அந்தப் பழைய காலத்தில், யார் என்ன என்று தெரியாது.. இப்போ எங்கயாவது தனியா, யாரும் இல்லாத டீக்கடைக்கு போனா, அங்க டீ நல்லா இருக்காது. கூட்டம் இருக்கிற கடையில்தான் டீ நல்லா இருக்கும். ஆனா எனக்கு பிடிச்ச கடையில இப்போ டீ குடிக்க முடியல. அது ஒரு பெரிய பிரச்சனைதான். ஆனால் ஓகே.

Advertisment
Advertisements

அண்ணா நகர் பக்கம் நிறைய போவேன். நைட்டு நேரத்துல, ரொம்ப அசால்டா போவேன். அப்போ என்ன டவுட் பண்ணுவாங்க தெரியுமா? 'இது அவன்தானா? இல்லை, அவனா இருக்க வாய்ப்பில்லை. ஏன் அவன் இங்க வரப்போறான்?' என்று பேசுவாங்க. அந்த இடத்தில், என்னை கூகுள்ல தேடி, 'ஆமாம்! இவன் தான்!' என்று சண்டை போடுவார்கள். இதெல்லாம் கேட்டுக்கிட்டு நான் அந்த இடத்த விட்டு போயிடுவேன்." என்று அவர் தனது அனுபவத்தை பகிர்ந்தார்.

சாம் சி.எஸ்-ன் வார்த்தைகளில் இருந்து புகழ் என்பது ஒருவகையில் சுகமானதுதான். ஆனால், சில சமயங்களில் அது ஒருவரின் தனிப்பட்ட சந்தோஷங்களை பறிக்கும்போது, அந்தப் புகழே ஒருவிதமான சோகமாக மாறுகிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: