இந்த தோசை சாப்பிட்டால் உடல் எடை குறைய உதவும். அதன் ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
ஒரு கப் சாமை அரிசி
அரை கப் ஜவ்வரிசி
இஞ்சி நறுக்கியது
பச்சை மிளகாய் நறுக்கியது
கொத்தமல்லி
ஒரு டீஸ்பூன் மிளகு பொடி
1 டீஸ்பூன் சீரகம்
2 டீஸ்பூன் தயிர்
அவித்த ஒரு உருளைக்கிழங்கு
செய்முறை: சாமை அரிசி, ஜவ்வரிசியை நன்றாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மிளகு பொடி, சீரகம், தயிர் சேர்த்து கலந்துகொள்ளவும். அதில் அவித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி தோசை சுடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“