New Update
00:00
/ 00:00
ஒரு முறை இப்படி சாமை சாம்பர் சாதம் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 கப் சாமை
அரை கப் துவரம் பருப்பு
5 கப் தண்ணீர்
1 ஸ்பூன் நெய்
2 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் கடுகு
4 வத்தல்
1 கொத்து கருவேப்பிலை
4 பச்சை மிளகாய்
சின்ன வெங்காயம் 10
3 உருளைக்கிழங்கு
2 கேரட்
கால் கப் புளி தண்ணீர்
கால் ஸ்பூன் மஞ்சள் பொரு
உப்பு
2 ஸ்பூன் சாம்பார் பொடி
செய்முறை : செய்முறை சாமையை நன்றாக கழுவி பருப்பு, தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய், எண்ணெய் கடுகு, கருவேப்பிலை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் நிறம் மாறியதும், அதில் நறுக்கிய உளைக்கிழங்கு, கேரட் சேர்த்து கிளரவும் . நன்றாக வேக வைக்கவும். தொடர்ந்து இதில் புளி கரைத்தது, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி சேர்த்து கிளரவும். வேக வைத்த சாமை மற்றும் பருப்பை சேர்த்து கிளரவும். தண்ணீர் சேர்த்து கிளரவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.