samantha akkineni instagram samantha sarees : தென்னிந்திய சினிமா உலகின் ஒரு சிறந்த நடிகை சமந்தா என்றால் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தொடங்கி ஃபேஷன் உலகில் அதிக கவனம் செலுத்துபவர். பொதுவாகவே, ஃபேஷன் என்றாலே பாலிவுட் தான் அதிகம் பேசப்படும்.ஆனால், தென்னிந்திய சினிமா உலகில் சமந்தா பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பார் போல்.
Advertisment
குறிப்பாக திருமணத்திற்கு பிறகு சமந்தா மீது விழும் பார்வை மாறி உள்ளது. குடும்பத்திலும் கவனம் செலுத்திக் கொண்டு தன்னுடைய ஆமிஷனிலும் கலக்கி வரும் சமந்தா, புடவை கட்டுவதே தனிஅழகு தான்.
Advertisment
Advertisements
சமந்தா புடவையை புதுவிதமாக அணிந்து மக்களுக்கு ஒரு புதிய யோசனையை சமீபத்தில் தந்தார் ஞாபகம் இருக்கிறதா? முதலில் புடவை கட்டி மேலே ஜாக்கெட்டை போடுவதற்கு பதிலாக ஆண்கள் அணியும் சட்டையை அணிவது, பிறகு மேலே முழுமையாக மூடப்பட்ட மேலாடையை அணிந்து கீழே புடவை கட்டினால் மிகவும் அழகாக தெரிவோம் என்றார்.
அடுத்து கழுத்தை முழுமையாக மூடி உள்ள ஜாக்கெட்டையும் போட்டுக்கொண்டு சிறியதாக மடிக்கப்பட்ட புடவையை கட்டுவது, என புடவையிலேயே பல பேஷன்களை தெறிக்க விட்டார். அவர், எந்த நிகழ்ச்சியில் புடவையில் கலந்துக் கொண்டாலும் எல்லோர் கண்ணும் சமந்த புடவை மேல் தன் விழும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil