Samantha Viral Photos Tamil : எப்போதும் வித்தியாச உடைகள் அணிந்து கலர்ஃபுல் போட்டோஷூட் எடுத்து அதனை அவ்வப்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் சமந்தாவின் சமீபத்திய புகைப்படப் பதிவு கலவையான உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ‘தி ஃபேமிலி மேன் 2’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைப்பாடுகளில் பிசியாக இருக்கும் சமந்தா, ஆலிவ் நிற ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேன்ட் காம்போவில் பாதி மிளிர்ந்தாலும், முழுமையான தோற்றம் ரசிகர்களின் எதிர்மறை விமர்சனங்களையே பெறுகிறது.
ஆலிவ் பச்சை நிற சட்டையின் தோள்பட்டையில் ஃப்ரில் வேலைப்பாடுகளுடன் இருக்கும் இந்த சட்டையை அணிவித்து சமந்தாவிற்கு ஸ்டைலிங் செய்தவர் ப்ரீதம் ஜுகால்கர். வித்தியாசமான ஸ்லீவ் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், ‘சமந்தாவிற்கு சூட் ஆகவில்லையோ’ என்கிற கேள்வி எழாமலில்லை. இந்த வித்தியாச ஸ்லீவ் கொண்ட சட்டைக்கு மேட்சாக சாம்பல்-கருப்பு நிறம் கலந்த ஜீன்ஸ் அணிந்திருக்கிறார். இந்த முழு அவுட்ஃபிட்டை வடிவமைத்தவர் துருவ் கபூர்.
View this post on Instagram
ஜீன்ஸில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஃப்ரில்-டீட்டெயில்ஸ் ஹயிலைட் எனலாம். இந்த வித்தியாச உடைக்குப் பொருந்தக்கூடிய காலணிகள் மற்றும் காதுகளில் பெரிய வளையங்கள் அணிந்திருக்கிறார். நியூட் வண்ண லிப்ஸ்டிக், காஜல், மஸ்காரா என மேக்-அப் அளவானதாக இருந்தாலும், .சமந்தா எப்போதும் உடுத்தும் உடையின் தேர்வாக இது இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“