/tamil-ie/media/media_files/uploads/2019/10/DSC02610-19.jpg)
samantha instagram
samantha instagram : செல்லப்பிராணிகள் அமைப்பின் தூதராக செயல்படுகிறார் எமி ஜாக்ஸன்.நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை அன்பு காட்டி வளர்க்கிறார் த்ரிஷா. அத்துடன் விலங்குகள் காப்பகமான பீட்டா அமைப்பில் இணைந்து சேவை செய்து வருகிறார்.
நடிகைகளுக்கு செல்லப்பிராணிகள் என்றல் ஒரு தனி பிரியம் அதிலும் நாய்கள் மீது தனி கவனிப்பு இருக்கும் முத்தமிட்டு கொஞ்சுவது, கட்டிப்பிடித்து தூங்குவது, மடியில் வைத்து விளையாடுவது என பொழுதை கழிப்பதுடன் அதற்கொன பிரத்யேக ஏசி அறை, குஷன் பெட் வரை எல்லா வசதிகளும் செய்து தருகின்றனர்.
தமிழ் திரையுலகில் நாயகிகள் பலர் செல்லப்பிராணிகள் மேல் அவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள். சொல்லபோனால் அவர்களது பிள்ளைகளை போல வளர்த்து வருகிறார்கள். இப்படிபட்ட மனம் உடைய நடிகைகள்தான் விலங்குகள் நல அமைப்பான பீட்டாவின் விளம்பர தூதர்களாகவும் வலம் வருகின்றனர்.
இப்படி விலங்குகள் மேல் அதிக அக்கறை காட்டும் நாயகிகளில் முதல் இடத்தில் இருப்பவர் யார் என்று கேட்டால், 90களின் முன்னணி நடிகையான கௌதமியை தைரியமாக கூறலாம். ஏனென்றால் இவரது வீட்டில் சுமார் 17 வெவ்வேறு வகையான நாய்களை பிள்ளைகளை போல வளர்த்து வருகிறார்.
இவருக்கு அடுத்ததாக செல்லபிராணிகள் என்றால் உயிரையும் விட தயங்காதவராக நடிகை திரிஷா இருக்கிறார். தற்பொழுது தன் வீட்டில் 7 நாய்களை வளர்த்து வருகிறார். இவர்கள் மட்டுமல்லாது, நடிகை அமலாபாலும் செல்லபிராணிகள் நல விரும்பி ஆவார். தன் வீட்டில் நான்கு நாய்களை வளர்த்து வரும் இவர், அவற்றின் பராமரிப்பு பணிகளை தானே கவனித்தும் வருகிறார். இப்படி செல்லப்பிராணிகளுடன் உலா வரும் நடிகைகளின் ஸ்பெஷல் கேலரியை இங்கே பாருங்கள்
தமிழ் சினிமா நடிகைகள் மட்டுமில்லை ஹாலிவுட், பாலிவுட் நடிகைகளுக்கும் செல்லப்பிராணிகள் வளர்பதில் ஆர்வம் அதிகம் . சமீபத்தின் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா தனது வளர்ப்பு பிராணிக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து ஜாக்கெட் ஒன்று வாங்கியது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.