இதை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே? சமந்தா, கீர்த்தி வைரல் போட்டோ
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளாக இருக்கும் சமந்தா, கீர்த்தி சுரேஷ் இருவரும் நெருங்கிய தோழிகள். மகா நடிகை படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
ஆள்பாதி ஆடைபாதி என்பது எதுக்கு பொருந்துகிறதோ இல்லையோ, சினிமா கலைஞர்களுக்கு கண்டிப்பாக கண்டிப்பாக பொருந்தும். எப்போதும் லைம் லைட்டில் இருப்பதால், அவர்களும் தங்களின் ஆடைத்தேர்வில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
Advertisment
சில நேரங்களில் சில நடிகர், நடிகைகள் உடுத்தும் ஆடை’ ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால், உடனே அதுபோன்ற மாடல் எங்குக் கிடைக்கும் என இணையத்தில் தேட ஆரம்பித்து விடுவார்கள். அப்படி உடை அணிவது முதல் மேக்கப் வரை பலருக்கும் சினிமா, சீரியல் தான் மினி டுட்டோரியலாக உள்ளது.
இந்நிலையில் இப்போது சமந்தா, நயன்தாரா இருவரும் ஒரே உடையில் இருக்கும் போட்டோக்களை தேடிக் கண்டுபிடித்து, இதில் யார் அழகாக இருக்கிறார்கள் என டிரெண்ட் செய்து வருகின்றனர்.
சமந்தா, கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ், கிரே கலரில் ஸ்லீவ்லெஸ் மேக்ஸி டிரெஸ் அணிந்து எடுத்த படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள், கீர்த்தியின் அழகையும், ஆடை நேர்த்தியையும் பாராட்ட, சமந்தா ரசிகர்கள், இதை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கிறது என சமந்தாவும் அதேபோல உடையுடன் இருக்கும் போட்டாக்களை பகிர்ந்தனர்.
அந்த ஆடையில் யார் அழகாக இருக்கிறார்கள் என ரசிகர்கள் இப்போது விவாதம் நடத்தி வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளாக இருக்கும் சமந்தா, கீர்த்தி சுரேஷ் இருவரும் நெருங்கிய தோழிகள். மகா நடிகை படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
சமந்தா நடிப்பில் தற்போது குஷி, சகுந்தலம், யசோதா ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சகுந்தலம், யசோதா, இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இவரது சாணிக்காயிதம் மற்றும் சர்க்காரு வாரி பட்டா படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இப்போது தமிழில் மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக, கீர்த்தி நடித்து வருகிறார். தெலுங்கில் தசரா, போலா சங்கர் படங்களும் அவர் வசம் உள்ளன. இப்போது சைரன் படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கமிட் ஆகியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“