சமந்தா தொடங்கி டாப்ஸி என லிஸ்ட் பெருசு.. ஏன் மாலத்தீவு மீது நடிகைகளுக்கு அப்படி ஒரு காதல்?

வெகேஷன் என்றாலே முதலில் மாலத்தீவுக்கு படை எடுக்கின்றனர்

samantha maldives samantha akkineni samantha
samantha maldives samantha akkineni samantha

samantha maldives samantha akkineni samantha: உலகிலேயே தட்டையான நாடு என்ற புகழுக்குரிய மிக அழகிய பல சிறிய தீவுகளால் ஆன நாடு தான் மாலத் தீவு. சுமார் 1,190 தீவுகளைக் கொண்ட ஒரு நாடு இது. இவற்றில் 200 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள்

நிலத்தை விட தண்ணீர் கொண்டு, மாலத்தீவுகள் உண்மையான தீவு நாடு. 26 பவள அட்லாண்ட்கள் முழுவதும் மாறி மாலத்தீவுகள், இந்திய பெருங்கடலில் 35,000 சதுர மைல் பரப்பளவில் 115 சதுர மைல்கள் பரப்பளவில் இணைந்த நிலப்பகுதியை மட்டுமே கொண்டுள்ளன. வெப்பமண்டல சூழல் ஆண்டு முழுவதும் மேல் 80 பரான்ஹீட் வெப்பநிலையில் வெப்பம் இருக்கும் போது, ​​இயற்கை தடைகள் இல்லாத ஒரு இனிமையான கடல் காற்று பார்வையாளர்கள் குளிர்விக்க அனுமதிக்கிறது. இப்படி மாலாத்தீவின் அழகை கூற ஒரு கட்டுரை போதாது. அதனால் தான் என்னவே கோலிவுட், பாலிவுட், டோலிவுட் அழகிகள் அனைவரும் வெகேஷன் என்றாலே முதலில் மாலத்தீவுக்கு படை எடுக்கின்றனர். அந்த வகையில் இன்று மாலாத்தீவு மீது காதல் கொண்ட ஹீரோயின்களின் புகைப்படங்கள் இதோ..

நடிகை சமந்தா தனது காதல் கணவருடன் சென்ற வாரம் மாலத்தீவுக்கு வெக்கேஷன் சென்றிருந்தார். ஷீட்டிங்கில் பிஸியாகைருந்த இருவரும், தங்களுக்காக நேரத்தை ஒதுக்கி இந்ஹ ட்ரிப்பை பிளான் செய்து அசத்தினார். மாலத்தீவில் சமந்தா எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் டாப் கிளாஸ்.

காஜல் அகர்வால் சமீபத்தில் தான் தொழிலதிபர் கெளதமை மணம் முடித்தார். இவர்கள் இருவரும் தேனிலவை கொண்டாடுவதற்காக மாலத்தீவுக்கு சென்றிருக்கிறார்கள்.

மாலத்தீவுக்குச் சென்ற நடிகை டாப்ஸி, அங்கு பல நாட்களாக ஓய்வெடுத்தார்.மாலத்தீவு ரெசார்ட்டில் மீன் பிடிப்பது, உணவு வகைகளை ஒரு பிடிபிடிப்பது என பொழுது போக்கி தனது டிராவல் விலாக் அசத்தினார்.

வேதிகா தனது விடுமுறையை கொண்டாட மாலத்தீவு சென்றார். பிகினி உடையில் கொடுத்துள்ள கிளாமர் போஸ் அனைவரின் கண்ணை விரிய வைத்துள்ளது.

நடிகை ரகுல் பிரீத் சிங் தனது குடும்பத்தாருடன் விடுமுறையை கழிக்க மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு அவர், ஆழ்கடன் நீச்சல், பிகினி போஸ், சன் பாத் என வெகேஷனை என் ஜாய் செய்த புகைப்படங்கள் இனையத்தில் வைரல்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Samantha maldives samantha akkineni samantha maldives pics samnatha insta

Next Story
டேஸ்டி… ஹெல்தி..! 5 நிமிடங்களில் பூண்டு- தக்காளி சட்னிred chilli chutney recipe chilli chutney recipe
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express