New Update
/indian-express-tamil/media/media_files/hqXg56NdtCqVTWUwL15B.jpg)
Samantha Barbiecore Trend
Samantha Barbiecore Trend
சமந்தாவின் வார்டிரோப், உன்னதமான காலத்தால் அழியாத ஆடைகள் மீதான அவரது காதலுக்கு சான்றாகும். மியூடட் டோன்களைத் தழுவுவதில் சமந்தாவுக்கு ஒரு திறமை இருக்கிறது.
தனது நியூட்ரல் சிக்னேட்சர் டோன்களுக்காக சமந்தா அறியப்பட்டாலும், இப்போது தனித்துவமான திருப்பத்துடன் பார்பிகோர் ஃபேஷன் துறையில் நுழைந்தார்.
பார்பிகோரின் உலகம் பல்வேறு இண்டர்பிரிடேஷன்ஸ் கண்டுள்ளது, ஆனால் சமந்தா அதை எடுத்துக்கொண்ட விதம் மறுக்கமுடியாத வகையில் காப்பகப்படுத்தப்பட வேண்டிய ஒரு டிரெண்ட்.
பார்பி உலகம் போல் தோன்றும் ஃபேஷன் உலகில், இது சமந்தாவின் பேஷன் கேம்..
ஒரு பவர்ஃபுல் பிளேன் பிங்க் நிற புடவையுடன் ஸ்ட்ராப்பி ப்ராலெட்-ஸ்டைல் பிளவுஸ் இணைத்து, ஒரு பேஷன் தருணத்தை உருவாக்கினார் சமந்தா. அதற்கு பொருத்தமாக சாஃப்ட் அண்டர்ஸ்டேடட் மேக்கப், வேவி பாப் ஹேர்ஸ்டைல் இந்த ஒட்டுமொத்த ஸ்டைலை முழுமையாக பூர்த்தி செய்தது.
இந்த சமீபத்திய தோற்றத்திற்கு முன், சமந்தா சினிமாவில் பிரேக் எடுத்து, உலகை சுற்றி வந்தார். அங்கும் சமந்தாவின் ஸ்டைல் பயணம் தொடர்ந்தது.
அப்படி ஆஸ்திரியாவின் வியன்னாவின் மயக்கும் தெருக்களில் ஒரு அழகான ஓட்டலில், பார்பிகோர் டிரெண்டில் சமந்தா தனது ஃபேஷன் கேமை பதிவு செய்தார்.
வெள்ளை நிற டேங்க் டாப், அதன் மேல் ஒரு மென்மையான பிங்க் ஷர்ட், ரோஜா நிற சன்கிளாஸ்த் தேர்ந்தெடுத்து, அவருடைய தோற்றத்தை நிறைவு செய்தார்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.