ஃபிட்னஸ் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கீங்களா? ஒரு நாள் நல்லா பயிற்சி செய்வது, அடுத்த நாள் ஐயோ கை வலிக்குது, கால் வலிக்குது-னு சொல்லி நாலு நாளைக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டியது.
நம்மில் பலரும் ஃபாலோ செய்யும் பிட்னஸ் பயிற்சி இதுதான். இன்னும் சில பேர் இருக்காங்க, கடுமையாக டயட் இருக்கேன்; நைட் சப்பாத்தி தவிர வேறு எதுவும் சாப்பிடுறது இல்ல-னு சொல்லுவாங்க... நிலவரத்தை விசாரிச்சா, 'அவன் சப்பாத்தியே 15 திங்குறான்'யா போன்ற புலம்பல்களை கேட்க முடியும்.
ஆனால், இவர்களுக்கெல்லாம் ஒரு அட்டகாசமான புத்துணர்ச்சி வீடியோ, இங்கே...
data-instgrm-version="12">
நம்ம சமந்தா பிட்னஸ்-காக எடுக்கும் முயற்சியை ஒரேயொரு முறை மட்டும் பாருங்க, சும்மா ஜிவ்வுன்னு பூஸ்ட் ஏறி தினம் மாங்கு மாங்குன்னு பிட்னஸ் பயிற்சியில் கவனம் செலுத்துவீங்க.
நம்ம சமந்தா அக்காவுக்கே பிட்னஸ் மோட்டிவேஷன் ஒன்னு இருக்கு. அதான் பார்க்கோர் பயிற்சி.
உயரமான மாடிக்கட்டிடங்களில் இருந்து சிலர் அனாயசமாக தாவிக் குதிக்கும் வீடியோவை எப்போதுவாது நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த விளையாட்டு முறைக்கு பெயர் தான் பார்க்கோர். அதற்கு மிகக் கடுமையாக பிட்னஸ் பயிற்சி தேவை. சும்மாலாம் செய்ய முடியாது.
நம்ம திஷா படானி தொடங்கி, சமந்தா, மாளவிகா மோகனன் வரை பார்க்கோர் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன், பார்க்கோர் பயிற்சி எடுத்து வில்லன் விஜய் சேதுபதியுடன் மோதுகிறார் என்பது கூடுதல் தகவல்.