அட, வெங்காயம்… அதையும் இப்படி நறுக்கினால்தான் ஈஸி!

வெங்காயம் எப்படி ஈஸியாகவும், சீக்கிரமாகவும்  நறுக்குவதென்று பிரபல சமையல் கலை வல்லுநர் குணால் கபூர் வீடியோ பதிவின் மூலம் கூறுகின்றார்.

By: January 13, 2021, 8:47:11 AM

Samayal kurippu tamil: பொதுவாக சமைப்பதற்கு ஒரு சில அடிப்படையான திறன்கள் இருக்க வேண்டும். அதிலும் முக்கியமானது காய்கறி வெட்டுவது மற்றும் வெங்காயம் வெட்டுவது. சமையலில் பெரும்பாலும் வெங்காயம் இல்லாமால் எந்த உணவுகளையும் தயாரிக்க முடியாது. வீட்டில் சாப்பிடும் போது  திடீரென முட்டை ஆம்ப்லேட்டோ  அல்லது முட்டை  பொடி மாஸோ சாப்பிட வேண்டும் என நினைப்பீர்கள். ஆனால் அந்த நேரத்தில் உணவகம் சென்று வாங்க முடியாது. வீட்டிலே சாப்பிட வேண்டும் என்றால் முதலில் வெங்காயம் எப்படி சீக்கிரமாக வெட்டுவது எனத் தெரிந்திருக்க வேண்டும். இல்லை என்றால் வெறும் (ப்லைன்) முட்டையாகத் தான் சாப்பிட முடியும். வெங்காயம் எப்படி ஈஸியாகவும், சீக்கிரமாகவும்  நறுக்குவதென்று பிரபல சமையல் கலை வல்லுநர் குணால் கபூர் வீடியோ பதிவின் மூலம் கூறுகின்றார்.

 


நீங்கள் செய்ய வேண்டியது:

முதலில் நன்றாக வெட்டும் ஒரு கத்தியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு காய்கறி வைத்து வெட்டும் அட்டை அல்லது கட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வெங்காயத்தை எடுத்து, அதை இரண்டாக வெட்டவும். வெட்டிய வெங்காயத்தின் தோலை உரிக்க வேண்டும். இப்போது கத்தியை எடுத்து,  நேராக வைத்துக்கொண்டு கோடு போடுவது போல் வெங்காயத்தின் மேல் ஒன்றன் பின் ஒன்றாக அழுத்தி வெட்ட வேண்டும். பின்னர் வெங்காயத்தை திருப்பி வைத்துக் குறுக்காகவும், வெங்காயத்தின் அடிப்பகுதியிலும் வெட்ட வேண்டும். இப்போது நீங்கள் வெட்டிய வெங்காயம் பொடிப் பொடியகிறுக்கும். நீங்கள் அதை எடுத்து முட்டை பொரியல் செய்து சாப்பிடலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:How to cut onions perfectly and easily by celebrity chef kunal kapur

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X