15 நிமிடத்தில் டேஸ்டி சாம்பார்: சிம்பிளான செய்முறை

sambar making tamil video:15நிமிடங்களில் சத்தான சுவையான சாம்பாரை செய்து முடிக்க முடியும். சிம்பிளாக சாம்பார் வைப்பது எப்படி?

hotel sambar recipe hotel samber making video
hotel sambar recipe hotel samber making video

Sambar recipe for rice, Sambar making tamil video: சில உணவுகள் எத்தனை முறை சாப்பிட்டாகும் சலிக்காது. அவற்றை நாம் தவிர்க்கவும் முடியாது. காரணம் அவற்றின் பயன்களும், நமது பாரம்பரிய உணவு முறையில் அவை கலந்துவிட்ட தன்மையும்தான். அப்படியொரு உணவுப் பொருள்தான் சாம்பார்.

சாம்பார் செய்ய மணிக்கணக்காக நீங்கள் நேரம் செலவு செய்ய வேண்டியதில்லை. 15நிமிடங்களில் சத்தான சுவையான சாம்பாரை செய்து முடிக்க முடியும். சிம்பிளாக சாம்பார் வைப்பது எப்படி? என இங்கு காணலாம்.

Sambar making tamil video:: சாம்பார்

சாம்பார் செய்யத் தேவையான பொருட்கள்: துவரம்பருப்பு – 1 கப், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – சிறிதளவு, வெந்தயம் – 1/4 டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கருவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன், சின்ன வெங்காயம் – 12, தக்காளி – 2, கேரட் – 2, பீன்ஸ் – 150 கிராம், கத்தரிக்காய் – 150 கிராம், உப்பு – சிறிதளவு, சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன், புளி தண்ணீர் – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு.

சாம்பார் செய்முறை:

முதலில் துவரம்பருப்பை கழுவி, குக்கரில் போட்டு 4 விசில் வரை வேக வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும். அதனுடன் முழு சின்ன வெங்காயம் நறுக்காமல் போட வேண்டும். பின்னர் எந்த காய்கறி வேண்டுமோ அதனை சேர்த்துக்கொள்ளலாம். அதனுடன் உப்பு போட்டு நன்றாக கலந்து விடவும்.

பிறகு மிளகாய்த்தூள், சாம்பார் பொடி சேர்த்து அதனுடன் புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிடுங்கள். ஏற்கனவே வேகவைத்த பருப்பையும் சேர்த்துக் கொள்ளவும். நன்கு கொதித்துவர, 10 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சாம்பார் தயார்.

காய்கறி சாம்பாரில் விட்டமின்கள் இருப்பதால், அதை தவிர்க்காதீர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sambar recipe for rice sambar making tamil video

Next Story
சுவையான சப்பாத்தி… மாவு ஃப்ரெஷ்ஷாக வைப்பது எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com