New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/10/sambar-idli.jpg)
Sambar Recipe In Tamil (Source: Chef Vicky Ratnani/Instagram; designed by Gargi Singh)
Idli Sambar making video: அலுவலகம் செல்கிறவர்களுக்கு இந்த சாம்பார் ரெசிபி பயனுள்ளதாக இருக்கும். சில நிமிடங்களில் தயார் செய்துவிடலாம்.
Sambar Recipe In Tamil (Source: Chef Vicky Ratnani/Instagram; designed by Gargi Singh)
Sambar Recipe In Tamil, Idli Sambar making video: கிராமத்து டிபன் கடைகளில் இட்லி, தோசை சாப்பிட்டிருக்கிறீர்களா? காய்கறி இருக்காது. பருப்பும்கூட தாளிக்க மட்டும் போதும். ஆனாலும் இட்லி- தோசைக்கு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும்.
சில நிமிடங்களில் தயார் செய்துவிடலாம் என்பதுதான் இந்த சாம்பாரின் ஸ்பெஷாலிட்டி. டேஸ்டான கிராமத்து டிபன் கடை சாம்பார் எப்படி வீட்டில் செய்வது எனப் பார்க்கலாம்.
டிபன் கடை சாம்பார் செய்யத் தேவையான பொருட்கள்: எண்ணெய் – இரண்டு டீ ஸ்பூன், கடுகு – கால் டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு – கால் டீ ஸ்பூன், கடலை பருப்பு – ஒரு டீ ஸ்பூன், வெந்தயம் – அரை டீ ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 5, கறிவேப்பிலை – சிறிதளவு, தக்காளி – 4, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள் தூள் – சிறிதளவு, உப்பு – தேவைகேற்ப, தண்ணீர் – தேவையான அளவு, கடலை மாவு – 2 டீ ஸ்பூன்
திடீர் சாம்பார் செய்முறை வருமாறு: வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
பின்னர் இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய கலவையில் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிடவும் . நன்கு கொதித்ததும் உப்பு, காரம் பார்த்து தேவையெனில் சேர்க்கவும். பிறகு கடலை மாவில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கி கொதிக்கும் குழம்பில் ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
அலுவலகம் செல்கிறவர்களுக்கும், குழந்தைகளை அவசரமாக பள்ளிக்கு அனுப்புகிறவர்களுக்கும் இந்த சாம்பார் ரெசிபி பயனுள்ளதாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.