sambar sadam lunch box recipes : குழந்தைகள் பள்ளியில் மதியம் சாப்பிட அருமையான உணவு சாம்பார் சாதம்.
Advertisment
சாம்பார் சாதம் என்பது கலவை சாத வகைகளுள் ஒன்று.
இதனை சுவையாகவும், எளிதாகவும் செய்யலாம். இது ஒரு தென்னிந்திய வகை சாதம். பருப்பு, காய்கறிகள் மற்றும் இந்திய மசாலாக்கள் சேர்த்து செய்யப்படுவது. மக்களுக்குப்பிடித்த சாம்பார் சாதம். கிராமப்புற சமூகங்களில் இதுவரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாக இருக்கிறது.
Advertisment
Advertisement
உருளைக்கிழங்கு, காரட்டை சற்று பெரிய துருவலாக துருவிக்கொள்ளவும்.வறுப்பதற்கான சாமான்களை வறுப்பதற்கு முன், கால் ஸ்பூன் எண்ணெயில் முதலில் பெருங்காயத்தை வறுத்து எடுத்துக்கொண்டு, அதன் பிறகு மற்ற சாமான்களை வறுத்தெடுத்து அதன் பின் பொடிக்கவும்.அரிசியையும் பருப்பையும் நன்கு கழுவி, 6 கப் நீர் ஊற்றி குக்கரில் 6 விசில் வரை நன்கு வேகவைக்கவும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
எண்ணெயை ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.நன்கு வதங்கியதும் தக்காளியையும் கொத்தமல்லி, சிறிய துண்டுகளாய் அரிந்த கத்தரிக்காய்கள் இவற்றைப்போட்டு மஞ்சள் தூளும் சேர்த்து கறிவேப்பிலையும் சேர்த்து, தக்காளி நன்கு குழைந்து மசியும் வரை நன்கு வதக்கவும்.அதன் பின் காரட், உருளைத்துருவல்கள் சேர்த்து ஒடு பிரட்டு பிரட்டவும்.
புளியைக்கரைத்து ஊற்றி சிறிது உப்பும் சேர்த்து வேக வைக்கவும்.மசாலா சற்று கெட்டியானதும் வெந்த சாதம், உருக்கிய நெய் சேர்த்து, போதுமான உப்பும் சேர்த்து, குறைந்த தீயில் அனைத்தும் சேரும் வரை ஐந்து நிமிடங்கள் கிளறவும்.கமகமக்கும் சாம்பார் சாதம் தயார்!!இதற்கு தொட்டுக்கொள்ளவென்று தனியாக எதுவும் தேவையில்லை. அருமையான ஊறுகாய், அப்பளம், வற்றல்கள் போதும்.