sambar sadam recipe sambar sadam recipe in tamil : சாம்பர் சாதம் என்று சொன்னாலே எச்சில் ஊறும் நபர்கள் உண்டு. அதிலும் பாலாஜி பவன், சரவண பவன் சாம்பார் சாதத்திற்கு அடிமையான நாக்குகளிங்கு ஏராளம். கொரோனா காலத்தில் ஹோட்டல் போய் சாப்பிட முடியுமா என்ன? வாங்க வீட்டிலேயே செய்யலாம் ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்.
sambar sadam recipe in tamil : செய்முறை!
அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
புளி – ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
சாம்பார் வெங்காயம் – 10
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
கலந்த காய்கள் – 2 முதல் 3 கப் வரை
முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு அலசி நான்கு கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை வடித்துவிட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு, நெய், ப.மிளகாய், பூண்டு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரை வேக விடவும்.
பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெட்டி வைத்த காய்கறியை போட்டு அத்துடன் சாம்பார் பவுடர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
குக்கராக இருந்தால் காய்கறிகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசிலுக்கு வேக விடவும்.
காய்கறி வெந்ததும் புளி கரைசல் விட்டு நன்கு கொதித்ததும் நன்கு வெந்த பருப்பு சாதத்தை கலந்து விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சாதத்தோடு சேர்த்து கிளறி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil