தாய்ப்பால் தானம் செய்யும் சீரியல் நடிகை சமீரா; நெகிழ வைக்கும் பின்னணி

நானும் ஆமிரும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில், 6 லிட்டருக்கும் அதிகமான தாய்ப்பாலை என்.ஐ.சி.யு. குழந்தைகளுக்காக சேமித்து வைத்துள்ளோம். நாங்கள் இதை இத்துடன் நிறுத்தப்போவதில்லை.

நானும் ஆமிரும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில், 6 லிட்டருக்கும் அதிகமான தாய்ப்பாலை என்.ஐ.சி.யு. குழந்தைகளுக்காக சேமித்து வைத்துள்ளோம். நாங்கள் இதை இத்துடன் நிறுத்தப்போவதில்லை.

author-image
WebDesk
New Update
Sameera sherief

Sameera sherief

தொலைக்காட்சித் தொடர்களின் ரசிகர்களுக்கு சாமீரா ஷெரீஃப் என்ற பெயர் புதிதல்ல. இவர் முதன்முதலில் அறிமுகமானது தெலுங்குத் தொடர்களில்தான். பின்னர், தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு' தொடர் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 

Advertisment

திருமணத்திற்குப் பிறகு, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமீரா, தனது அன்றாட வாழ்க்கை, ஷூட்டிங் அனுபவங்கள், ரீல்ஸ், அழகிய புகைப்படங்கள், பயணங்கள் என அனைத்தையும் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். 

சமீரா - அன்வர் தம்பதியருக்கு, 'ஐயான்' என்ற ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. தாய்மைப் பயணத்தையும், குழந்தையுடன் கழிக்கும் இனிமையான தருணங்களையும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பகிர்ந்து, பல இளம் தாய்மார்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார் சமீரா. சமீபத்தில் இந்த தம்பதிக்கு மீண்டும் ஒரு அழகான ஆண்குழந்தை பிறந்தது. 

Advertisment
Advertisements

தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் சமீரா, எஞ்சிய தாய்ப்பாலை சேகரித்து மருத்துவமனைகளில் என்.ஐ.சி.யு.க்களில் சிகிச்சை பெற்று வரும் இளம் பிஞ்சுகளுக்கு தானம் செய்கிறார். 

இதுகுறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீரா வெளியிட்ட பதிவில், ”தாமதமாக இருந்தாலும் பரவாயில்லை!

தாய்ப்பாலூட்டுவது கடினமானதல்ல, முக்கியமானது, உங்களையும், உங்கள் உடலையும், உங்கள் குழந்தையையும் நம்புவதே. மன அழுத்தமில்லாமல், நிதானமாக இருங்கள்... நீர்ச்சத்துடனும், நல்ல உணவோடும், மகிழ்ச்சியாகவும் இருங்கள், தொடர்ந்து தாய்ப்பால் கொடுங்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக தாய்ப்பாலை கொடுக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உற்பத்தி செய்வீர்கள்.

நானும் ஆமிரும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில், 6 லிட்டருக்கும் அதிகமான தாய்ப்பாலை என்.ஐ.சி.யு. குழந்தைகளுக்காக சேமித்து வைத்துள்ளோம். நாங்கள் இதை இத்துடன் நிறுத்தப்போவதில்லை. தேவைப்படும் குழந்தைகளுக்கு இந்த தங்க திரவத்த்தை தொடர்ந்து தானமாக அளிப்போம்” என்று அதில் உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். 

தாய்ப்பால்... இது வெறும் உணவு அல்ல, அது ஒரு வரம். ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு அளிக்கும் உயிர் அமுதம். ஆனால், சில தாய்மார்களால் பல்வேறு காரணங்களால் தங்கள் குழந்தைகளுக்குப் போதுமான தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை. அதேபோல, குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், நோய்த்தொற்றுக்கு உள்ளான பச்சிளம் குழந்தைகள் போன்றவர்களுக்குத் தாய்ப்பால் அத்தியாவசியமான ஒன்றாகிறது. இதுபோன்ற சூழல்களில் தாய்ப்பால் தானம் ஒரு வரப்பிரசாதமாகிறது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: