/tamil-ie/media/media_files/uploads/2021/03/Sanam1up.jpg)
Sanam Shetty Skincare Secrets Sanam Beauty Tips Tamil
Sanam Shetty Skincare Secrets Tamil : மாடலிங் துறையில் பிசியாக இருந்த சனம் ஷெட்டி, பிறகு திரைத்துறையிலும் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். பிக் பாஸ் சீசன் 3-ல் பங்குபெற்ற தர்ஷனின் காதலியாக கிசுகிசுக்கப்பட்டவர், பின்னாளில் இருவருக்கும் பிரேக்-அப் என்கிற சர்ச்சையில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளானார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Sanam2.png)
ஆனால், சற்றும் தளராமல், பிக் பாஸ் சீசன் 4-ல் பங்குபெற்று, ஆரம்பத்தில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், பின்னாளில் இதுவரை யாருக்குமில்லாத அளவிற்கு ஆதரவைப் பெற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்துகொண்ட ஸ்கின்கேர் சீக்ரெட்டுகளை இங்கு பார்க்கலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Sanam3.png)
"சரும பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமான செயல்முறை. க்ளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்ச்சரைசிங், இவைதான் என்னுடைய ரொட்டின். காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளும் முகத்தைக் கழுவுவது முக்கியம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஃபேஸ் வாஷ் உங்கள் சருமத்திற்கு எந்தவித தீங்கும் விளைவிக்காமல் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வாங்குவது சிறந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Sanam4.png)
முகத்தைக் கழுவிய பிறகு டோனர் பயன்படுத்துவது அவசியம். ஏனென்றால் கழுவும்போது முகத்தில் துளைகளெல்லாம் திறந்திருக்கும். டோனர் அவற்றையெல்லாம் அடைத்து, உங்கள் சருமத்தை ஒரேபோன்றதாக மாற்றும். இதற்குப் பிறகு மாய்ஸ்ச்சரைசர் போடும்போது, உங்கள் சருமம் அவற்றை உரிந்துகொள்ளும். அதனால், உங்கள் சருமம் மிருதுவாக மாறும். நாள் முழுவதும் சருமம் ஆரோக்கியமாக இருக்க இதனை செய்தாலே போதும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Sanam5.png)
ஒருநாளில் அவ்வப்போது கற்றாழையையும் பயன்படுத்தலாம். என்னதான் மேக்-அப் போட்டாலும், இந்த மூன்று பொருள்களையும் நிச்சயம் பயன்படுத்தத் தவற மாட்டேன். அதேபோல, இரவு தூங்குவதற்கு முன்பு எவ்வளவு சோர்வாக டயர்டாக இருந்தாலும் நிச்சயம் மேக்-அப் அகற்றிவிட்டு தான் தூங்கவேண்டும். தரமான நைட் க்ரீம் கூட பயன்படுத்தலாம்"
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.