Is sandalwood paste the ultimate skincare hack for zits?
சந்தைகளில் ஏராளமான தயாரிப்புகள் கிடைத்தாலும், பலர் தங்கள் சரும பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க இயற்கை வைத்தியத்தை நம்புகிறார்கள். அதில் ஒன்று, முகப் பருக்களுக்கு சந்தன பேஸ்ட்டைப் பயன்படுத்துவது.
Advertisment
மருத்துவர் ஷோனாலி சபேர்வாலும் இதை ஒப்புக் கொண்டுள்ளார். நான் எப்போதும் என் பருக்களில் சந்தனத்தைப் பயன்படுத்துகிறேன்; இது பல ஆண்டுகளாக பெரும் உதவியாக உள்ளது. சந்தனத்தின் குளிரூட்டும் பண்புகள் எந்தவொரு முகப்பரு பிரச்னைக்கும் உதவுகின்றன.
என் வீட்டில் ஒரு சந்தனக் கட்டை உள்ளது, அது எனக்கு பல ஆண்டுகளாக நீடித்தது. ஆனால் ஒரு அற்புதமான ஆயுர்வேத மையத்தில் தங்கியிருக்கும் போது எனக்கு புதிய சந்தனப்பொடி கிடைத்தது என்று மருத்துவர் ஷோனாலி கூறினார்.
சந்தன பேஸ்ட் அனைவரும் பயன்படுத்தலாமா?
தோல் மருத்துவர் ரிங்கி கபூர் கூறுகையில், சந்தன பேஸ்ட் பருக்கள், சிட்ஸ், மற்றும் தோல் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. சந்தனம் முகப்பரு, தழும்புகள், தடிப்புத் தோல் அழற்சி மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற பிற நிலைகளையும் நீக்கும். சந்தனம் தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு உதவுகிறது என்று டாக்டர் கபூர் கூறினார்.
ஆயுர்வேதத்தின்படி சந்தனம் மிகவும் பயனுள்ளது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று இயற்கை மருத்துவர் சந்தோஷ் பாண்டே தெரிவித்தார்.
இது டேனிங் மற்றும் வெயிலின் போது சருமத்தை குளிர்விக்கவும், அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் சருமத்தை ஆற்றவும் உதவுகிறது, குறிப்பாக ஜிட்ஸ், முகப்பரு மற்றும் தடிப்புகள் போன்ற நிகழ்வுகளில், என்று டாக்டர் பாண்டே கூறினார்.
ஆயுர்வேத மருத்துவர் அசுதோஷ் நானல் கருத்துப்படி, சந்தன பேஸ்ட் நிறமாற்றம், பெரிய அல்லது சிறிய தோல் வெடிப்புகளை குறைக்க உதவுகிறது. எரிச்சல் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இது பெரும் உதவியாக இருக்கும். இது வெளிப்புறமாகப் பயன்படுத்தப்படலாம் மற்றும் உட்கொள்ளலாம், ஆனால் சந்தனம் தூய்மையான மற்றும் உண்மையான தரத்தில் இருந்தால் மட்டுமே என்று டாக்டர் நானல் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
ஜிட்களுக்கு (zits) சந்தனத்தை பயன்படுத்தலாமா?
இருப்பினும், மற்ற மருந்துகளைப் போலவே, அத்தகைய தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு நிபுணர்களின் கருத்தைக் கடைப்பிடிப்பது நல்லது, மேலும் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். டாக்டரிடம் பேசுவது இன்னும் சிறந்த யோசனையாகும், பின்னர் அதை தோலில் மட்டுமே பயன்படுத்துங்கள்.
முறையான வழிகாட்டுதல் இல்லாமல் தவறாகப் பயன்படுத்தினால், ஒவ்வாமை, பிக்மென்டேஷன் போன்றவற்றை உண்டாக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன, என்றார் டாக்டர் கபூர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“