sandy master wife bigg boss sandy : தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு நடனம் கற்றுத்தருபவர் காலா மாஸ்டர். இவரிடம் நடனம் கற்று தேர்ந்தவர் தான் சாண்டி மாஸ்டர். இப்போது கோலிவுட்டில் சாண்டி பிஸியான டான்ஸ் மாஸ்டராக மாறிவிட்டார். கடந்த வருடம், ஒளிப்பரப்பான
Advertisment
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இவ்வளவு விறுவிறுப்பாக, கலகலப்பாக ஓடியதற்கு காரணமே சாண்டி மாஸ்டர் என்று சொல்லலாம்.
சாண்டியை பொறுத்தவரையில் யாரையும் கஷ்டப்படுத்தாத வேண்டும் என்று விரும்பாதவர். தன்னை சுற்றியுள்ள அனைவரையும் சிரித்துகொண்டே இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். இந்நிகழ்ச்சியில், இரண்டாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்று, மக்கள் மனதில் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றவர் சாண்டி.இவர் சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்
ஏற்கனவே சாண்டி மாஸ்டர் காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டு பின் சில்வியாவை இரண்டாம் திருமணம் செய்தார். சாண்டியின் டான்ஸ் கிளாசில் மாணவியாக சேர்ந்து, அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சில்வியா.
Advertisment
Advertisements
சாண்டி - சில்வியா திருமணம் தொடங்கி அவர்கள் அதன் பின்பு கலந்துக் கொண்ட எல்லா மேடையிலும் கண்டிப்பாக நடனம் ஆடாமல் இருக்கமாட்டார்கள். அவர்கள் இருவருக்கும் நெருக்கமான பாடலொன்று உள்ளது. அதைத்தான் எல்லா மேடைகளிலும் பிளே செய்வார்கள். வழக்கம் போல் கலக்கலாக ஆடுவார்கள்.
அதே போல், சாண்டியின் மச்சினிச்சியும் இணையத்தில் வைரல் தான். இவர் தனது மாமாவுடன் (சாண்டி) நிறைய டிக் டாக்குகளை செய்து அசத்துவார். இவர்களின் டிக் டாக் வீடியோஸ்-க்கு தனியாக ஃபேன்ஸ் பட்டாளமே உண்டு. மொத்தத்தில் சாண்டி தொடங்கி, அவரின் மனைவி, மகள், மச்சினிச்சி என அனைவரும் இண்டர்நெட்டில் வைரல் தான்.
சமீபத்தில் சாண்டி மாஸ்டரின் மாமனார் காலமானர். இந்த வருத்தத்தில் இருந்த சாண்டியை அவரின் பிக் பாஸ் நண்பர்கள் கவின், சரவணன் ஆகியோர் தான் மீட்டெடுத்தாக சாண்டியின் நெருக்கிய உறவினர்கள் கூறி இருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil