/indian-express-tamil/media/media_files/2025/08/20/sangeetha-redin-kingsley-love-story-2025-08-20-13-58-40.jpg)
Sangeetha Redin Kingsley
“என் லைஃப்ல சில விஷயங்கள் ரொம்ப வித்தியாசமா நடக்கும். எல்லாருக்கும் காதல் எங்கெங்கேயோ வரும். ஆனா எனக்கு அது எங்கப்பாவோட மரணத்துலதான் வந்தது. அப்பா இறந்த அந்த நேரத்துல அவர் என்னை வந்து பார்க்க வந்தார். அப்பா இறந்ததுனால உடனே வர முடியலை. ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சுதான் வந்தாரு. ஷூட்டிங்ல இருந்து நேரா வீட்டுக்கு வந்துட்டார்.
அப்போ எங்க வீடு ஒருமாதிரி சோகமா, ஒரு நெகட்டிவ் வைப்ல இருந்தது. எல்லாரும் அப்பாவுடைய இழப்பால ரொம்ப உடைஞ்சுபோயிருந்தோம். ஆனா, இந்த மனுஷன் வந்ததும், ஒரு அஞ்சு நிமிஷத்தில அந்த இடத்தை கலக்கலன்னு பண்ணிட்டார். இது ஒரு துக்க வீடு மாதிரியே இல்லாம ஆக்கிட்டார். அப்போதான் நான் ரியலைஸ் பண்ணேன், என் அப்பாவும் இந்த மாதிரி ஒரு ஆள்தான். எவ்வளவு பெரிய கஷ்டம், சோகமான சூழ்நிலை இருந்தாலும், அதைப் பத்தி ரொம்ப ஃபீல் பண்ணி புலம்பிட்டு இருக்க மாட்டார். எல்லாத்தையும் பாசிட்டிவ்வாதான் எடுத்துப்பார்.
உண்மைய சொல்லணும்னா, நான் சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ள வந்ததே எங்க அப்பாவாலதான். அவர் ரொம்ப போல்டா, தைரியமா என்னை அனுப்பி வெச்சார். "பரவாயில்ல, தைரியமா போம்மா, நான் பார்த்துக்கறேன்"னு சொன்னார். அப்போதான் எனக்குள்ள ஒரு எண்ணம் வந்தது. இனிமேல் நம்மளோட லைஃப் டிராவல் பண்ண இவர்தான் சரியான ஆள்னு. அந்த இடத்துலதான் எங்க காதலுக்கு ஸ்பார்க் வந்தது.
எங்க ரெண்டு பேருக்குமே நிறைய கடந்த காலங்கள் இருக்கு. ஆனா நாங்க ரெண்டு பேரும் ஒரு முக்கியமான முடிவு எடுத்தோம். ஒருத்தருடைய பாஸ்டை இன்னொருத்தர் பேசிக்கக் கூடாதுன்னு. முக்கியமா, சோஷியல் மீடியால வர கமெண்ட்ஸ் எல்லாம் பெருசா எடுத்துக்கக் கூடாது. அதேமாதிரி, "ஃப்யூச்சர் ஃப்யூச்சர்"ன்னு ரொம்பவும் திட்டமிடக் கூடாது.
ஏன்னா, வாழ்க்கையில ஒரு அடிப்படைத் தேவை, பாதுகாப்பு இருந்தா போதும். வாழ்க்கையை ஜாலியா அனுபவிக்கணும். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள்தான் முக்கியம். எப்பவுமே எல்லாத்தையும் பிளான் பண்ணி, ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா போனா லைஃப் போர் அடிச்சுடும். அப்படி வாழணும்னு எங்க ரெண்டு பேருக்குமே ஆசை இல்லை. நானும் ரொம்ப திட்டமிட்டு வாழற கேரக்டர் கிடையாது. "வாழ்க்கை போற போக்கில போகட்டும், ஆனா, அது ஹெல்த்தியா, சேஃபா எப்படி போகணும்னு மட்டும் பிளான் பண்ணிக்கலாம்"னு முடிவு பண்ணினோம். அதனாலதான், யாரோட பாஸ்ட்டையும் பேசிக்கக் கூடாதுனு முடிவு எடுத்தோம். ஏன்னா, சில சமயம் அது ஹர்ட் பண்ற மாதிரி இருக்கலாம். நல்ல விஷயங்களை மட்டும் பேசிக்கலாம்னு தீர்மானிச்சோம்” இப்படி சங்கீதா குமுதம் ஸ்நேகிதி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை மனம் திறந்து பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.