எத்தனையோ உடைகள் காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றம் அடைந்தாலும், சில உடைகள் என்றுமே தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். அவற்றில் சேலைக்கு முதன்மையான இடம் உண்டு. அதுவும் பிரபலங்கள் உடுத்தும் சேலைகள் பெரும்பாலும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். அந்த வரிசையில் தற்போது ட்ரெண்டில் இருப்பவர் சானியா மிர்சா
அண்மையில், பி.வி. சிந்து திருமண ரிசப்ஷனில் கலந்து கொண்ட சானியா மிர்சா மீது எல்லோரது கவனமும் இருந்தது. குறிப்பாக, திராட்சை நிறத்தில் அவர் நேர்த்தியாக உடுத்தியிருந்த சேலை இணையத்தில் வைரலாக பகிரப்பட்டது.
இதற்கு ஏற்றார் போல், அவர் அணிந்திருந்த வைரத் தோடுகள் மற்றும் வளையல்கள் மேலும் அழகு சேர்க்கும் வகையில் அமைந்தது. உடைக்கு தகுந்தாற் போல், சானியா மிர்சா மேக்கப்பும் போட்டிருந்தார். மெரூன் நிற லிப்ஸ்டிக், மஸ்காரா என அனைத்தும் மிக இயல்பாக இருந்தது.
இந்தப் புகைப்படங்களை சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.