New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/01/sanjeev-kapoor_1200.jpg)
Two useful Sanjeev Kapoor cooking hacks you should know
உங்களுக்கு உதவக்கூடிய செஃப் சஞ்சீவ் கபூரின் இரண்டு சமையல் குறிப்புகள் இங்கே உள்ளன.
Two useful Sanjeev Kapoor cooking hacks you should know
சஞ்சீவ் கபூர் இந்தியாவின் தலைசிறந்த சமையல்காரர் மற்றும் உணவு நிபுணர்களில் ஒருவராக தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய அருமையான சமையல் குறிப்புகள் மற்றும் சமையல் ஹேக்குகள் உள்ளன, அதை சமைக்க விரும்புபவர்கள் முயற்சிக்க வேண்டும்.
உங்களுக்கு உதவக்கூடிய செஃப் சஞ்சீவ் கபூரின் இரண்டு சமையல் குறிப்புகள் இங்கே உள்ளன.
பூண்டை எளிதாக தோலுரிப்பது எப்படி:
நமது பல உணவுகளில் பூண்டு முக்கிய மூலப்பொருள். பூண்டு எப்படி தோலுரிப்பது என்பது குறித்த விரைவான உதவிக்குறிப்பு இங்கே.
உடனடி தேவைக்கு, பூண்டை எளிதாக உரிக்க, கத்தியின் பின்புறத்தால் அதை அழுத்தவும்.. இது தோலை எளிதில் அகற்ற உதவும்.
ருசியான பிரட் கிரம்ப்ஸ் எப்படி செய்வது?
ரொட்டி துண்டுகள் மீதம் உள்ளதா? காலாவதிக்கு முன் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான உதவிக்குறிப்பு இங்கே உள்ளது, வீட்டிலேயே கிரிஸ்பி பிரட் கிரம்ப்ஸ் நீங்களே தயாரிக்கலாம்.
எப்படி செய்வது?
வீடியோவில் காட்டியபடி முதலில் ரொட்டி துண்டின் ஓரங்களை வெட்டவும். இந்த துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில், அரைத்த ரொட்டியை சேர்த்து கிரிஸ்பி ஆக மாறும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
சுவையான பிரட் கிரம்ப்ஸ் தயார். இது கோட்டிங் செய்வதற்கு மற்றும் வறுக்க சிறந்தது.
பிரட் கிரம்ப்ஸ் மூலம் நீங்கள் செய்யக்கூடிய பல்வேறு விஷயங்கள் உள்ளன - ப்ரெட்டு சிக்கன், சர்க்கரை வள்ளிக்க்கிழங்கு பஜ்ஜி, சீஸி கட்லெட், பிரடட் சிக்கன் ரேப் போன்றவை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.