அப்பா மாதிரி ஒரு பொண்ணு; அம்மா மாதிரி ஒரு பொண்ணு: சரண்யா பொன்வண்ணன் க்யூட் ஃபேமிலி

நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள்கள் கலாட்டா பின்க் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தங்களது பெற்றோர் குறித்து பேசியுள்ளனர். வீட்டில் அம்மா ரொம்ப ஸ்ரிக்ட். ஆனால் அப்பா அப்படி இல்லை. நாங்கள் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது நாங்கள் எடுத்த முடிவு தான் என்றனர்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள்கள் கலாட்டா பின்க் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தங்களது பெற்றோர் குறித்து பேசியுள்ளனர். வீட்டில் அம்மா ரொம்ப ஸ்ரிக்ட். ஆனால் அப்பா அப்படி இல்லை. நாங்கள் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது நாங்கள் எடுத்த முடிவு தான் என்றனர்.

author-image
WebDesk
New Update
saranya ponvannan family

அப்பா மாதிரி ஒரு பொண்ணு; அம்மா மாதிரி ஒரு பொண்ணு: சரண்யா பொன்வண்ணன் க்யூட் ஃபேமிலி

தமிழ் சினிமாவில் முன்னணி 'அம்மா' நடிகையாக வலம் வரும் சரண்யா, நிஜ வாழ்க்கையில் தனது மகள்களுக்கு ஒரு கண்டிப்பான தாயாக இருக்கிறார் என அவரது மகள்களே பேட்டியில் தெரிவித்துள்ளனர். அவரது கணவர் பொன்வண்ணன், தான் அவ்வளவு கண்டிப்பானவர் இல்லை என்றும் சரண்யாதான் கண்டிப்புடன் இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

Advertisment

saranya ponvannan

கடந்த 1987-ஆம் ஆண்டு 'நாயகன்' படத்தின் மூலம் அறிமுகமான சரண்யா, தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல படங்களில் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றிருக்கிறார். ‘தவமாய் தவமிருந்து’, ‘எம் மகன்’, ‘நீர்ப்பறவை’, ‘கோலமாவு கோகிலா’ போன்ற படங்களில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது ‘கேங்ஸ்டர் கிராணி’ என்கிற தமிழ் படத்திலும், ‘பா பா பா’ என்கிற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். 

கடந்த 1995-ஆம் ஆண்டு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என 2 மகள்கள் உள்ளனர். இருவரும் மருத்துவம் படித்து, மூத்த மகள் குழந்தைகள் நல மருத்துவராகவும், இளைய மகள் பொதுநல மருத்துவராகவும் பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் கலாட்டா பின்க் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சரண்யா-பொன்வண்ணன் தம்பதியின் மகள்கள், தங்களது பெற்றோரைப் பற்றிப் பேசினர். சரண்யாவின் மூத்த மகள் பிரியதர்ஷினி, மக்கள் சேவையில் ஈடுபடும் மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்து உள்ளார். அவர் தற்போது குழந்தைகளுக்கான மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகள் சாந்தினி தற்போது மகப்பேறு மருத்துவராக (Gynaecologist) பணிபுரிந்து வருகிறார். 

Advertisment
Advertisements

saranya 2

"எங்கள் அம்மா வீட்டில் ரொம்ப கண்டிப்புடன் இருப்பார், ஆனால் அப்பா அப்படி இல்லை. நாங்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்பது எங்களின் சொந்த முடிவுதான். நாங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இருவரும் சொன்னதில்லை. ஆனால் படிப்பு என்று வரும்போது, மார்க் குறைந்தால் திட்டு விழும். வீடு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று அம்மா விரும்புவார். சாப்பிட்டுவிட்டு தட்டை கழுவவில்லை என்றால் கூட திட்டு விழும். அம்மா ஷூட்டிங் போனாலும் அங்கிருந்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்" என்று மகள்கள் கூறியுள்ளனர்.

"அப்பாவை விட அம்மாதான் ரொம்ப கண்டிப்புடன் இருப்பார். ஆனால் எங்களுக்குப் பிறந்த நாள் வந்தால், மெட்டீரியல் எடுத்து வந்து அவரே தைத்து கொடுப்பார். முன்பு ஒரே மாதிரியான ஆடையைத்தான் தைத்து கொடுப்பார். இப்போது மாற்றிவிட்டார்" என்றும் மகள்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மகள்களின் படிப்பு குறித்துப் பேசிய பொன்வண்ணன், "நான் கண்டிப்பானவன் இல்லை. என் மனைவிதான் கண்டிப்பானவர். மகள்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக அதிகாலை 2 அல்லது 4 மணிக்கெல்லாம் எழுந்து அவர்களைப் படிக்க வைப்பேன். அந்தப் பொறுப்பை அவர்கள் என்னிடம் கொடுத்துவிடுவார்கள்" என்றார்.

தான் கண்டிப்புடன் இருப்பதற்கான காரணத்தை விளக்கிய சரண்யா, "நான் கண்டிப்பானவள்தான். அவர்கள் என்ன சாப்பாடு கொண்டு போகிறார்கள் என்பதை கூட நான் கவனிப்பேன். வாழ்க்கையில் ஒழுக்கம் வேண்டும் என்பதற்காகத்தான் நான் கண்டிப்புடன் இருக்கிறேன்" என்று கூறினார். மேலும், தங்கள் இருவரையும் போல் திரையுலகை மகள்கள் தேர்ந்தெடுக்காமல், தனித்துறையைத் தேர்வு செய்துகொண்டது மகிழ்ச்சி எனப் பொன்வண்ணன் குறிப்பிட்டார்.

கலாட்டா பிங்க் யூடியூப் சேனலில் பதிவிட்ட இந்த வீடியோவில், ரசிகர்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். மூத்த மகள் சரண்யா மாதிரியும், இளைய மகள் பொன்வண்ணண் போலவும் உள்ளனர். உங்கள் குடும்பத்தை பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: