தாய் பால் கொடுத்தால், பெண்களின் அழகு கூடும், மேலும் குழந்தைகள் அழகாக மாறுவார்கள் என்று நடிகை சரண்யா பொன்வண்ணன் தனியார் கல்லூரியில் நடைபெற்ற தாய்ப்பால் வாரதிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசினார்.
ஆகஸ்டு 1 முதல் 7ம் தேதி வரை உலக தாய்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை பேரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் தாய்ப்பால் வாரத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நடிகை சரண்யா பொன்வண்ணன் “ உலக தாய்பால் வாரத்தை கொண்டாடும் நிகழ்வுக்காக என்னை அழைத்தது பெருமையாக உள்ளது. தாய்மார்கள் அனைவரும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைப்பதற்கு என்னை ஒரு கருவியாக பயன்படுத்தியதில் மகிழ்ச்சி. தாய்பால் கொடுக்கும் வழக்கம் இடையில் குறைந்திருந்தாலும் தற்போது அதிகரித்துள்ளது.
தாய்மார்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான தாய்ப்பால் உருவாகிறது. தாய்பால் கொடுப்பதால் அழகு குறையும் என்பதில் உண்மையே இல்லை தாய்பால் கொடுப்பதால் குழந்தை மற்றும் தாயின் அழகு கூடும்.
பெரும்பாலான பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதுதான்.” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“