சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜய தசமி 2024: உங்க வீட்டில் வழிபடுவது எப்படி? அனிதா குப்புசாமி விளக்கம்

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜய தசமி வழிபாடு பற்றி அனிதா குப்புசாமி கூறியுள்ளார்.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜய தசமி வழிபாடு பற்றி அனிதா குப்புசாமி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Saraswathi Pooja, Ayudha pooja 2019 messages quotes images wishes in Tamil

கல்வி, தொழில் தொடங்க உகந்த நாளான சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜய தசமி நாட்களில் வீட்டில் வழிபாடு செய்வது எப்படி என அனிதா குப்புசாமி விளக்கி உள்ளார். அவர் கூறுகையில், நவராத்திரியில் 9 நாட்கள் வழிபட்ட பலன் கிடைக்க வேண்டும் என்றால் அது அஷ்டமி நாளில் கிடைக்கும்.

Advertisment

அஷ்டமி நாளில் வழிபாடு செய்தால் அது சிறப்பானதாக இருக்கும். அஷ்டமி  தினத்தில் தான் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வருகிறது. 

அஷ்டமி அம்மாளுக்கு உரிய நாள். நவராத்திரி நாளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு 2024-ல் அஷ்டமி திதி அக்டோபர் 10-ம் தேதி வருகிறது.  அஷ்டமி திதி அக்.10 காலை 8.06 மணிக்குத் தொடங்கி நாளை(அக்.11) 7.22 மணிக்கு முடிவடைகிறது. சூரிய உதய நாளிகை பார்க்கும் போது அஷ்டமி திதி நாளை (அக்.11) வருகிறது. ஆயுத பூஜை தினத்தில் பொறி, கடலை வைத்து வழிபடலாம். 

Advertisment
Advertisements

அக்டோபர் 12 விஜய தசமி நாள் வெற்றி கொண்டு மகிழ்ச்சியாக இருக்கின்ற நாள். விஜய தசமி நாளில் பராசக்தி, மகாலட்சுமி, சரஸ்வதி தேவி படம், சிலை வைத்து காலையிலேயே நெய் வேதியம் செய்து பூஜை செய்து வழிபாடு செய்யலாம். வீட்டில் கொலு வைத்தவர்கள் அன்றைக்கு மாலை விளக்கு வைப்பதற்கு முன் கொலு எடுக்கலாம் என்று அவர் கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: