scorecardresearch

ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் : பூஜை செய்யும் நேரம் இதோ

Saraswati puja and ayudha pooja 2019 timing: புத்தகம், பேனா, வண்டிச்சாவி,  எல்லாம் இன்றையக் காலக் கட்டங்களில் நம்மை வழி நடத்தும் ஆயுதங்கள்  தான்.     

Goddess-Saraswati-Hindu-Goddesses-and-Deities-1

Saraswati Puja, Ayudha Pooja 2019 timing :  நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில், ஒன்பதாவது நாள் ஆயுத பூஜையாகவும், பத்தாவது நாள் விஜயதசமியாகவும் கடைபிடிக்கப் படுகிறது. இந்த ஆண்டு, நவராத்திரி  செப்டம்பர் 29ம் தேதி, (புரட்டாசி 12)  தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இன்று(அக்டோபர் 7 ) ஆயுத பூஜை தமிழகம் முழுவது வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புராணக் கதைகளின் படி பார்த்தால்  மகிசாசூரணை வதம் செய்வதற்கு பயன்பட்ட ஆயுதங்களைக்  கொண்டாடும் விதமாக ஆயுதபூஜை கொண்டாடப் பட்டு வருகிறது, வெற்றிபெற்ற நிகழ்வை விஜய தசமியாகவும் (  அக்டோபர் 8 ) கொண்டாடி வருகிறோம்.

பூஜைக்கான நேரம்:

இன்று காலை 9:00 – 10:00 நல்ல நேரமாக அமைந்துள்ளது. அதே போன்று,  மாலை 4.45 முதல் 5.45 மணி வரை நல்ல நேரமாகவும் அமைந்துள்ளது. தாங்கள் பயன்படுத்தும், தங்கள் வாழ்கையை அர்த்தமாக்கும் ஆயுதங்களை இறைவன் காலடியில் வைத்து இன்றைய நாளில் பூஜிப்பது வழக்கம். உங்கள் புத்தகம், பேனா, வண்டிச்சாவி,  எல்லாம் இன்றையக் காலக் கட்டங்களில் நம்மை வழி நடத்தும் ஆயுதங்கள்  தான்.

அவல், பொரி, சுண்டல் போன்றவைகள் இந்நாளில் அனைவரும் பயன்படுத்துவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உற்றார் உறவினர்களோடு தங்களது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் பெருவாரியான மக்கள் இன்று வெளிப்படுத்துவார்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Saraswati puja ayudha pooja 2019 timing importance wishes in tamil

Best of Express