கோவையை அடுத்த பூசாரிபாளையம் பகுதியில் 300ஆண்டுகள் பழமை வாய்ந்த அடைக்கலம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆற்றில் இருந்து உருவாகிய இந்த அம்மனை முன்னோர்கள் முதல் ஆண்டு தோறும் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 4″ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனையடுத்து அம்மன் திருக்கலாயணம், அபிஷேகம்,பிடிமன் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக இன்று மேல தாலங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பக்தர்கள் தங்களது மீது சாட்டையை சுழற்றி அடித்து கொண்டு ஆற்றங்கரையில் இருந்து அம்மனை கோவிலுக்கு அழைத்து வந்தனர்.

முன்னதாக அம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்தனர். இந்த சாட்டையடி திருவிழா மூலம் தங்களது நேர்த்தி கடனை செலுத்தியது பக்தர்களிடையே பரவசத்தில் ஆழ்த்தியது.
செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“