Advertisment

முனியாண்டி விலாஸ் கொத்து பரோட்டா!!!! டாப் டக்கர் தூள்...

நினைச்ச நேரமெல்லாம் ட்ரை பண்னி சாப்பிட வேண்டியது தான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
முனியாண்டி விலாஸ் கொத்து பரோட்டா!!!! டாப் டக்கர் தூள்...

இரவு 8 மணிக்கு மேல் சாலையோர கடைகளில் ‘டங் டங்’ என்ற சத்ததுடன் மணக்க மணக்க வாசனையுடன் கொத்து பரோட்டா தயாராகிக் கொண்டிருக்கும். அந்த சத்தமே நமது வயிற்றில் பசியை தூண்டிவிடும். தமிழ்நாட்டில் பரோட்டாவிற்கு எப்போதுமே ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

Advertisment

தூத்துக்குடி பரோட்டா, பாடர் பரோட்டா, முட்டை மசால் பரோட்டோ, விருதுநகர் பரோட்டா, முனியாண்டி விலாஸ் பரோட்டா என ஏகப்பட்ட வெரைட்டிகள் சொல்லிக் கொண்டே போகலாம்.. இதில் கொத்து பரோட்டாவிற்கு என்று தனியாக ஒரு கூட்டம். துண்டுகளாக்கப்பட்ட பரோட்டா உடன் மசாலா சேர்த்து தயாரிப்பது கொத்து பரோட்டா. அந்த மசாலா என்னவாக வேண்டுமானலும் இருக்கலாம். முட்டை தொடங்கி சிக்கன், மட்டன், வாத்துக்கறி, காடை என உங்களுக்கு பிடித்தமான இறைச்சியை சேர்த்து பரோட்டா மாஸ்டர்கள் அவர்களில் ஸ்டைலில் வாழை இலையில் பரிமாறுவார்கள். அதை பார்க்கும் போதே சும்மா அப்படி இருக்கும் போங்க..

கொத்து பரோட்டா இண்ட்ரோ ஆனது முதலில் மதுரையில் தான். மைதா மாவு உருட்டி, பிசைந்து, தேய்த்து, ரொட்டி போல சுட்டு எடுத்து, முட்டை, அல்லது கறித்துண்டுகளை சேர்த்து, மசாலாப்பொருட்கள் சேர்த்து கொத்தி எடுத்தால் கொத்து பரோட்டா தயார். பரோட்டா பிரியர்கள் பலருக்கும் இறைச்சி சேர்க்கும் கொத்து பரோட்ரோவை விட முட்டை கொத்து பரோட்டா தான் கொள்ளை பிரியம். காரணம் பரோட்டா உடன் முட்டை சேர்த்தால் வரும் டேஸ்ட் வேறலெலவல்.

சரி பாஸ் கொத்து பரோட்டா பற்றி சும்மா சொல்லிட்டே இருந்தா போதுமா என்னா? எப்படி செய்யுறாங்கனு தெரிஞ்சுக்கா வேணாமா? முனியாண்டி விலாஸ் கொத்து பரோட்டா வீட்டிலேயே எப்படி பண்ணலாம்னு தெரிஞ்சிகிட்டா எப்படி இருக்கும் சொல்லுங்க.. நினைச்ச நேரமெல்லாம் ட்ரை பண்னி சாப்பிட வேண்டியது தான்.. அப்ப வாங்க செஞ்சி பார்க்கலாம்...

முட்டை கொத்து பரோட்டா:

தேவையான பொருட்கள்:

1. மைதா மாவு

2. வெங்காயம்

3. பச்சை மிளகாய்

4.தக்காளி

5.மஞ்சள்தூள்

6.கருவேப்பிலை

7.கரம் மசாலா

8.தனியா தூள்

9.சீரகத்தூள்

10.மிளகாய்த்தூள்

12.மட்டன் அல்லது சிக்கன் குழம்பு

13.எண்ணெய்

14. முட்டை

செய்முறை:

1. முதலில் மைதா மாவை, உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து, அதை வட்டமாக தட்டி பரொட்டோ போல் சுட்டு எடுக்க வேண்டும்.

2. பின்பு, தவாவில் எண்ணெய் ஊற்றி அதில், நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

3. வெங்காயம் வதங்கியதும், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,மிளகுத்தூள், தனியா தூள், சீரகத்தூள், தக்காளியைச் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.

4. இப்போது பரோட்டோவை எடுத்து தனித்தனியாக பிய்த்து கொண்டு அதில் சேர்க்க வேண்டும்.

5. அதனுடன், மட்டன்குழம்பு அல்லது சிக்கன் சால்னாவை ஊற்றி கலக்கிக் கொள்ளவும்.

6. பின்பு, தேவையான முட்டையை உடைத்து ஊற்றி நன்கு வதக்கிக் கொள்ளவும். இறுதியில் இரண்டு இரும்பு கரண்டிகளை வைத்து பரோட்டாவை நன்கு கொத்தவும்.

7. அதன் மேல் எண்ணெய்யை தூவி பதமாக கொத்தி, இறுதியாக கொத்தமல்லி தூவி பரிமாறினால் சுடச்சுட கொத்து பரோட்டா சூப்பராக ரெடி!

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment