ஆசை ஆசையாய் சிக்கன் சிந்தாமணி....

ஐடியாவே இல்லாதவங்க கூட செய்து பார்த்து டேஸ்ட் எப்படி இருக்குனு தெரிந்துக் கொள்ளலாம்

கோயம்புத்தூர் மக்கள கேட்டா தெரியும். சிக்கன் சிந்தாமணி என்றால் என்னனு…  மசாலா பொடி எதுவே போடாம காரம் மட்டும் தூக்கலாம் இருக்கும். சிக்கன் என்றாலே சூடு என்பார்கள் ஆனால் சிந்தாமணி சிக்கன் மட்டும்  உடலுக்கு சூடே கிடையாது காரணம் அதை மண் சட்டியில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சமைப்பார்கள்.

பெரும்பாலும் நாமெல்லாம் தயிர் சாதத்திற்கு சைடிஷா என்ன சாப்பிடுவோம், ஊறுக்காய், உருளைக்கிழங்கு வறுவல் இல்லனா ஜிப்ஸ் இப்படி தானே. ஆனால்,   கோவை மக்களோ தயிர் சாதத்திற்காகவே சிக்கன் சிந்தாமணியை செய்வார்களாம்.   வாரத்திற்கு ஒருமுறையாவது எல்லோரு வீட்டிலையும் இந்த சிக்கன் சிந்தாமணி கட்டயாம் இடம் பிடித்து விடும்.

சிக்கனை வைத்து ஏதாவது புதுசா ட்ரை பண்னி பார்க்கனு நினைக்கறிவங்க இந்த சிக்கன் சிந்தாமணியை கட்டாயம் செய்து பாருங்கள். ஐடியாவே இல்லாதவங்க கூட செய்து பார்த்து டேஸ்ட் எப்படி  இருக்குனு தெரிந்துக்  கொள்ளலாம். ருசி எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சினா அதொட மொத்த  வெற்றியும் கோவை மக்களையே  போய் சேரும். சரி வாங்க டைம் வேஸ்ட் பண்ணாம சிக்கன் சிந்தாமணியை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

1. நாட்டுக்கோழி

2. நல்லெண்ணை

3. கடும்

4. இஞ்சி பூண்டு விழுது

5. கறிவேப்பிலை

6.சின்ன வெங்காயம்

7. காய்ந்த சிவப்பு மிளகாய்

8. மஞ்சள் தூள்

செய்முறை: 

1. அடுப்பில் சட்டியை வைத்து அதில் கடுகு போட்டு தாளிக்கவும். பின்னர் அதில் சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.

2. பின்பு, அதில் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

3. அதன் பின்பு, தேவையான சிவப்பு மிளகாயை அம்மில் அரைத்து எடுத்து, அதையும் சட்டியில் போட்டு வதக்க வேண்டும்.

4.இப்போது அதில், சுத்தம் செய்து வைத்துள்ள கோழிக்கறையை போட்டு , தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து சுண்ட வதக்கி எடுக்க வேண்டும்.

5. அடிக்கடி நடுவில் கிளறிவிடவும் அடிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து சிக்கனை வெளியில் எடுத்து நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறினால் ஆசையாய் எடுத்து அப்படியே சாப்பிட தோணும் சிக்கன் சிந்தாமணி ரெடி!

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close